நீண்ட நாட்களுக்கு பிறகு தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் அப்பாஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அப்பாஸ் தனது அறுவை சிகிச்சை முடிந்த பிறகு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Actor Abbas Release New Video Post Operation
Advertising
>
Advertising

Also Read | "H. வினோத் முதல்ல வாரிசு தான் பாக்க போறார்".. துணிவு பாடலாசிரியர் வைசாக் EXCLUSIVE!

1996-ம் ஆண்டு காதல் தேசம் படத்தில் அறிமுகமான அப்பாஸ் தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் கோ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் பச்சைக்கள்ளம் (மலையாளம்) படம் 2016-ம் ஆண்டு வெளியானது.

கடந்த 2001-ம் ஆண்டு எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் உள்ளனர். அப்பாஸ் தற்போது  குடும்பத்தாருடன் ஆக்லாந்தில் (நியூசிலாந்து) வசித்து வருகிறார்.

நடிகர் அப்பாஸ், தனது கால் முட்டியில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அடுத்து அக்டோபர் மாதம் தன்னுடைய முட்டியில் ஏற்பட்ட காயத்திற்காக பிசியோதெரபி சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

இச்சூழலில் கடந்த மாதம் வலது காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதாக குறிப்பிட்ட அப்பாஸ் விரைவில் நலம் பெறுவேன் என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது உடல்நிலை & மனநிலை குறித்து பேசியுள்ளார்.

மேலும் தன்னை நலம் விசாரித்த, விசாரிக்க முயன்று தொடர்பு கொண்ட நண்பர்களுக்கும், தனது மனைவிக்கும் நன்றி கூறியுள்ளார். மேலும் "வேலை செய்வதற்கு அலுவலகம் வந்துள்ளேன். மருத்துவர்கள் அறிவுறுத்தல் படி வாகனம் ஓட்டுவதில்லை. அறுவை சிகிச்சை முடிந்து சில வாரம் எதுவும் செய்ய முடியவில்லை‌.  இந்த மோசமான காலகட்டத்தை கடந்து வருவேன்" என்று அப்பாஸ் பேசியுள்ளார்.

Also Read | "உங்க பயணத்தில் என்னை கைப்பிடிச்சு கூப்புட்டு போறிங்க".. கமல் குறித்து உதயநிதி நெகிழ்ச்சி!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Abbas Release New Video Post Operation

People looking for online information on Abbas, அப்பாஸ் will find this news story useful.