நடிகர் அப்பாஸ் நேரலையில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், “இது நான் சந்தோஷமாக பொழுதை கழிக்கும் ஒரு இடம்” என்று சொல்லி ஒரு இடத்தை காண்பித்த அப்பாஸ் ஒரு முக்கிய அமர்வில் நண்பர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்ததைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
அப்போது அப்பாஸ் பல விஷயங்களை உருக்கமாக தெரிவித்திருக்கிறார். குறிப்பாக நியூசிலாந்தில் இருக்கும் இந்திய ரசிகர்களுடன் பேசிய அப்பாஸ் இதுகுறித்து தம்முடைய நெகழ்ச்சியை தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர் கொஞ்ச நேரம் தமிழில் பேசலாம் என்று சொல்லி, “அனைவருக்கும் வணக்கம். நேற்று கேள்வி பதில் அமர்வில் வித்தியாசமான கேள்வி & வாழ்க்கையை பொறுத்தவரை சில பர்சனல் விஷயங்களை பகிர்ந்து கொண்டீர்கள். அதற்கு நன்றி. எனக்கு அவ்வளவு அன்பு, பாசம் நம்பிக்கை கொடுத்து ஒளிவுமறைவின்றி பேசிய அனைவருக்கும் நன்றி. இந்திய மற்றும் நியூசிலாந்து ரசிகர்களுக்கு நன்றி விரைவில் சந்திப்போம் என்று கூறினார்.
குறிப்பாக ரசிகர் ஒருவர், அப்பாஸ் எப்போதும் சமூக வலைத்தளத்தில் இருப்பது பற்றி கேட்டதற்கு, “நான் இந்தியாவில் தான் இருக்கிறேன் என்று அர்த்தமில்லை. எந்த நாட்டில் எந்த நேர சூழ்நிலையில் இருப்பேன் என்பது எனக்கு தெரியும். அதற்கான காரியம் காரணம் உள்ளிட்டவற்றை நானறிவேன். அதைப்பற்றிய விமர்சனத்தை நான் எடுத்துக் கொள்ளவில்லை.
இப்போது நான் படம் பண்ணுவதில்லை. சில இயக்குனர்கள் கதை சொல்வதற்கு நேரம் கேட்டு இருந்தாலும்கூட... இருப்பினும் சொல்ல முடியாது.. ஒரு அருமையான கதை என் மனதுக்கு பிடித்து இருந்தால் நிச்சயமாக பண்ணுவேன்.. ஆனால் இப்போதைக்கு எனக்கு ஆர்வமில்லை.
தினமும் எளிமையான சின்ன சின்ன பிரச்சினைகள் மண்டைக்குள் வந்து கொண்டிருக்கிறது. குடும்பத்தில் இருந்து நிறைய இடங்களுக்கு பிரிந்து சென்று இருக்கிறார்கள். ஒரு குடும்பம் சேர்ந்து எப்படி இருக்கலாம் என்பது குறித்து ஆசைகள் நிறைய இருக்கிறது. இளைஞர்கள், உழைக்கும் மக்கள், வேலையில் இருப்பவர்கள் பலருக்கும் தற்கொலை எண்ணம் மேலிடும்.
நானும் மிக டீன்-ஏஜ் வயதில் தற்கொலை எண்ணங்களை எதிர்கொண்டேன். அந்த நிலையில், என்னுடைய உயிரை விடாமல் வாழ்க்கையில் ஒரு சிறந்த இடத்துக்கு நகர்ந்து வந்திருக்கிறேன். என் வாழ்க்கை அனுபவம் ஒருவரின் வாழ்க்கையை மாற்றினால் எனக்கு மிகப்பெரிய வெற்றி அல்லது விருது என்று சொல்வேன். என்னுடைய நோக்கம் அப்படியான உதவியை நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் செய்யவேண்டும் என்பதுதான்.
ஆனால் இதற்கெல்லாம் ஊக்கமும் வரவேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு பாசிட்டிவ் எண்ணங்களை கொடுக்க முடியும். அதற்கு உங்களுடைய சப்போர்ட் தேவை. என்ஜாய். நன்றி” என்று குறிப்பிட்டிருக்கிறார். தொண்ணூறுகளின் பிரதான இளம் நடிகரான அப்பாஸ், “காதல் தேசம்” உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தையே தன்னகத்தே கொண்டுள்ளார். இன்றும் அப்பாஸ்க்காண ரசிகர்கள் வட்டம் அவரின் நீங்காத அன்பை கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை என்பது எதற்கும் தீர்வோ, முடிவோ அல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வது நமக்கும் நம் சார்ந்தவர்க்கும் பேரிழப்பு. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.