காதலுக்கு மரியாதை அப்பாஸ் நடிக்க வேண்டிய படமா!.. எப்படி மிஸ் ஆச்சு? அவரே பகிர்ந்த EXCLUSIVE தகவல்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

1996-ம் ஆண்டு காதல் தேசம் படத்தில் அறிமுகமான அப்பாஸ் தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.

Advertising
>
Advertising

கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் கோ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் பச்சைக்கள்ளம் (மலையாளம்) படம் 2016-ம் ஆண்டு வெளியானது.

கடந்த 2001-ம் ஆண்டு எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் உள்ளனர். அப்பாஸ் தற்போது  குடும்பத்தாருடன் ஆக்லாந்தில் (நியூசிலாந்து) வசித்து வருகிறார்.

நடிகர் அப்பாஸ், தனது கால் முட்டியில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அடுத்து அக்டோபர் மாதம் தன்னுடைய முட்டியில் ஏற்பட்ட காயத்திற்காக பிசியோதெரபி சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

இச்சூழலில் கடந்த மாதம் வலது காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதாக குறிப்பிட்ட அப்பாஸ் விரைவில் நலம் பெறுவேன் என்று பதிவிட்டு இருந்தார். பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தனது உடல்நிலை & மனநிலை குறித்து பேசியிருந்தார். மேலும் தன்னை நலம் விசாரித்த, விசாரிக்க முயன்று தொடர்பு கொண்ட நண்பர்களுக்கும், தனது மனைவிக்கும் நன்றி கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் அப்பாஸ் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது சினிமா வாழ்க்கை மற்றும் உடல்நலம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். காதலுக்கு மரியாதை படத்தில் முதலில் நடிக்க வேண்டியது நீங்கள் தானா? என்ற கேள்விக்கு அப்பாஸ், "காதலுக்கு மரியாதை படத்தில் முதலில் நடிக்க வேண்டி இயக்குனர் பாசில் என்னை நடிக்க வைக்க அனுகியுள்ளார்.

அப்போது எனது மேலாளர் கால்சீட் தேதி வழங்கவில்லை. அது எனக்கு தெரியாது. அந்த படம் மிஸ் ஆன பிறகு தான் தெரிந்தது. என்னோட மேனேஜர் இந்த படம் பற்றி எனக்கு சொல்லாமல் வேறு வேறு படங்களில் கால்சீட் தேதி வழங்கி விட்டார்". என அப்பாஸ் கூறினார்.

காதலுக்கு மரியாதை அப்பாஸ் நடிக்க வேண்டிய படமா!.. எப்படி மிஸ் ஆச்சு? அவரே பகிர்ந்த EXCLUSIVE தகவல்கள் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Abbas Exclusive Interview about His Cinema Life

People looking for online information on Abbas, Kadhaluku Mariyadhai will find this news story useful.