ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகிய இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ள நிலையில் தற்போது அவர்களுக்கு ஹல்தி சடங்கு நடந்துள்ளது.
Also Read | ஆர் கண்ணன் இயக்கத்தில் கடவுள் வேடத்தில் யோகிபாபு… TIME TRAVEL வேறயா…வெளியான Title
ஆதி & நிக்கி கல்ராணி…
பிரபல நடிகரான ஆதி, தமிழில், மிருகம், ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். கடைசியாக, அவரது நடிப்பில் உருவாகி இருந்த 'கிளாப்' திரைப்படம், நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகி இருந்த 'டார்லிங்' மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார் நடிகை நிக்கி கல்ராணி. இதனைத் தொடர்ந்து, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஹரஹர மஹாதேவகி, கலகலப்பு 2, உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.
இணைந்து நடித்த படங்கள்…
இவர்கள் இருவரும் இணைந்து தெலுங்கு மற்றும் தமிழ் என இருமொழிக்ளிலும் சேர்ந்து நடித்து வந்தனர். இதற்கிடையில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகின. அதை இருவருமே ஒத்துக்கொள்ளாமலும் மறுக்காமலும் மௌனமான இருந்து வந்தனர்.
நிச்சயதார்த்தம்…
இந்நிலையில் அவர்களின் காதல் குறித்த தகவல்களை உண்மையாக்கும் வகையில், சமீபத்தில் இருவருக்கும் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகின. இதை ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர், தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர வைரலாகின. கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி, தங்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்ததாக இருவரும் குறிப்பிட்டுள்ள நிலையில், இருவரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
வைரலாகும் மணமக்கள் புகைப்படங்கள்…
சமீபத்தில் இவர்கள் இருவருக்குமான நலுங்கு சடங்கான ‘ஹல்தி’ சமீபத்தில் நடந்துள்ளது. இதில் மணப்பெண் மற்றும் மணமகன் ஆகிய இருவரும் பாரம்பரிய உடைகளில் மஞ்சள் பூசி நடனமாடியுள்ளனர். இந்த வீடியோவில் இருவரின் நண்பர்களும் கலந்துகொண்டு நடனமாடிய வீடியோ வைரலானது. இந்நிலையில் இப்போது இவர்களின் திருமணம் நடந்துமுடிந்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பலரும் மணமக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8