அட்லி மீதான விமர்சனம்- கொந்தளித்த ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

அட்லியின் முதல் படமான ‘ராஜா ராணி’தற்போதைய லேடி சூப்பர் ஸ்டாரின் சிறந்த ரீ-எண்ட்ரி படமாக அமைந்தது. அத்துடன், நடிகர்கள் ஜெய், ஆர்யா, நஸ்ரியா உள்ளிட்டோருக்கும் இப்படம் சிறந்த பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய்யை வைத்து அடுத்தடுத்து அட்லி இயக்கிய ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களும் சூப்பர் ஹிட்டானது. குறைந்த படங்களை இயக்கியிருந்தாலும், தனக்கென ஒர் ரசிகர்கள் பட்டாளத்தை அட்லி உருவாக்கி வைத்துள்ளார்.

தற்போது மீண்டும் தளபதி விஜய்யுடன் இணைந்து ‘தளபதி 63’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சிஎஸ்கே-கொல்கத்தா அணிகள் இடையிலான கிரிக்கெட் மேட்ச்சில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும், இயக்குநர் அட்லியும் சந்தித்துக் கொண்டனர்.

அட்லியும், ஷாருக்கானும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் வைரலான நிலையில், அட்லியை கிண்டல் செய்யும் விதமாக பரவிய மீம்ஸ் மற்றும் விமர்சனங்களுக்கு அவரது ரசிகர்களும், திரையுலகினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் அட்லி தனது உழைப்பாலும், திறமையாளும், இந்திய சினிமாவின் அடையாளமாக போற்றப்படும் நடிகர் ஷாருக்கானை இயக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார். உணர்வு பூர்வமான காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தும் தனித்துவம் அட்லிக்கே உரியது என அவரது ரசிகர்கள் அட்லிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘தளபதி 63’ திரைப்படத்தை தொடர்ந்து பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிக்கும் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குநர் அட்லி இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Abusive remarks on Atlee after IPL match with Shah Rukh Khan, Fans extend love towards atlee

People looking for online information on Atlee, Shah Rukh Khan, Thalapathy 63, Vijay will find this news story useful.