"இது லிஸ்ட் இல்ல ட்விஸ்ட்டு!".. அபிஷேக், அக்‌ஷரா, பாவனி ரெடி பண்ணும் புது நாமினேஷன் லிஸ்ட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பல்வேறு விதமான டாஸ்குகள் புதிது புதிதாக கொடுக்கப்பட்டு வருகின்றன.

abishek prepares biggbosstamil5 new nomination lists

ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களுக்கு எந்த நெருக்கடியும் தரப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் எந்த அளவுக்கு பங்களிப்பு செய்கிறார்கள்? அவர்கள் இருப்பை பதிவு செய்கிறார்களா? அல்லது காணாமல் போகிறார்களா? என்பது குறித்த விவகாரங்களை கண்டுபிடிக்கும் ஆய்வில் அபிஷேக், பாவனி மற்றும் அக்ஷரா மூன்று பேருக்கும் பொறுப்பு தரப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து அவர்கள் ஒவ்வொருவரிடமும் விசாரித்து பிக்பாஸ் வீட்டுக்குள் காணாமல் போனவர்களின் பட்டியலை சேகரிக்கின்றனர். இந்த பொதுவான ஆய்வு முடிவின்படி குறிப்பிட்ட நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று பிக்பாஸ் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விதிமுறைகளை முன்பே அபிஷேக் பிக்பாஸ் வீட்டுக்குள் படித்துக் காட்டியிருக்கிறார்.

அதன்படி பிக்பாஸ் வீட்டுக்குள் பங்கேற்பு இல்லாதவர்கள் லிஸ்டில் இசைவாணி, நடியா, மது, ஐக்கி, சின்ன பொண்ணு ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதேபோல் இந்த வாரத்தின் சிறந்த எண்டர்டெயினராக பலரும் ராஜூவின் பெயரை முன்மொழிந்துள்ளனர்.

மற்ற செய்திகள்

Abishek prepares biggbosstamil5 new nomination lists

People looking for online information on Abishek, AksharaReddy, BiggBossTamil5, Pavani, PavaniReddy will find this news story useful.