"கல்யாண LIFE-ல சிக்கல்.. ஒருத்தருக்கு SORRY சொல்லணும்" - கண்ணீர் விட்டழுத அபிஷேக் BB JODIGAL 2

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமானவர் அபிஷேக் ராஜா. யு டியூப் பிரபலம் மற்றும் திரை விமர்சகரான அபிஷேக் ராஜா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் கலந்து கொண்டார். இடையில் வெளியேறிய இவர் மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார்.

Advertising
>
Advertising

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களைக் கொண்டு பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியின் இரண்டாவது தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ரம்யா கிருஷ்ணன் விருந்தினராக பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் ஏற்கனவே விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது. இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் வெற்றி பெற்ற ராஜூ மற்றும் ரன்னர்-அப்பாக வந்த விஜே பிரியங்கா இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாக இருவரும் எடுத்துச் செல்லுகின்றனர். இதில் பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் யாரேனும் ஒருவருக்கு Sorry சொல்ல வேண்டுமென்றால் யாருக்கு செல்வார்கள்.? எதற்காக.? என்று கேட்கப்பட்டது.

அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை சொல்ல, அப்போது அபிஷேக் ராஜா தன்னுடைய தந்தைக்கு Sorry சொல்ல வேண்டும் என்று பேச தொடங்கினார். அழுது கொண்டே பேசிய அவர், “என்னுடைய திருமண வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் இருந்தது. அந்த சமயத்தில் என்னுடைய தந்தை என்னை பார்க்க வேண்டும் என்று கூறினார். நான் திருட்டுத்தனமாகவாவது மதுரைக்கு சென்று அவரைப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அடுத்த ஏழு நாட்களுள் அவர் மரணம் அடைந்தார். அந்த குற்ற உணர்ச்சி இன்னும் இருக்கிறது. அவருக்கு Sorry சொல்ல வேண்டும்!” என்று சொல்லிக் கொண்டே கதறி அழ தொடங்கினார்.

இதனை தொடர்ந்து அபிஷேக் ராஜா அருகில் இருந்த சக போட்டியாளர்கள் அவரைத் தேற்றி அமர வைத்தனர். அவர் பேசும்பொழுது மிகவும் எமோஷனலாக, நடிகை ரம்யா கிருஷ்ணன் அபிஷேக் ராஜாவை பார்த்துக் கொண்டு இருந்தார். இது தொடர்பான புரோமோ விஜய் டிவியில் வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Abhishek Raaja emotional over his father memories BB Jodigal 2

People looking for online information on Abhishek raaja, Abishek, Abishek Raaja, BBJodi2, BBJodigal2, Bigg Boss 5, Bigg Boss 6, Bigg boss next season update, Bigg Boss OTT, Bigg Boss Tamil 5, Bigg boss update will find this news story useful.