"ஜால்ரானு சொல்றா.. கேவலமா இருக்கு!".. அபிஷேக் பண்ணிய அட்வைஸ்.. பிரியங்காவின் பதிலடி! #BIGGBOSSTAMIL5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து ஏற்கனவே எலிமினேட் ஆனவர் அபிஷேக். மீண்டும் அபிஷேக் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

abhishek advise over thamarai issue priyanka answer BB5
Advertising
>
Advertising

முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது அபிஷேக், பிரியங்கா, நிரூப் எனும் இந்த கேங்க் செய்த அட்ராசிட்டி பலராலும் மறக்க முடியாதது. பலருக்கும் விருப்பமான இந்த மூவர் கூட்டம் அதன் பிறகு நாளடைவில் தனித்தனி ஆனது என்று சொல்லலாம். ஒரு டாஸ்க்கில் மூவரும் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்து அனைவரையும் அதிர வைத்தனர்.

abhishek advise over thamarai issue priyanka answer BB5

அபிஷேக் எலிமினேட் ஆன பிறகு பிரியங்கா மற்றும் நிரூப் இருவருக்கும் இடையே சற்று விரிசல் ஏற்பட்டது. எனினும் இருவரும் ஒருவருக்கொருவர் டாஸ்க்கின்போது மட்டும்தான் அப்படி இருப்பதாகவும், மற்ற நேரங்களில் நல்ல நண்பர்களாக வெளியே சென்று இருக்கப் போவதாகவும் பிரியங்கா தெரிவித்து வந்திருந்தார்.

இதனிடையே அபிஷேக், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியபோது அதற்காக மிகவும் அழுது வருத்தப்பட்டவர் பிரியங்கா தான். மீண்டும் அபிஷேக், பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த போதும் வாயடைத்துப் போய் நின்றதும் பிரியங்கா தான்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் பள்ளி காலங்களை நினைவு படுத்தும் கனா காணும் காலங்கள் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் பள்ளிச்சீருடையில் குழந்தைகளாகவே மாறி விட்டனர். இவர்களுள் சில வித்தியாசமான பிரச்சினைகளுடன் கூடிய ஆசிரியர்களாக அபிஷேக், ராஜூ, புதிய போட்டியாளராக இணைந்த விஜய் டிவி கோரியோகிராஃபர் அமீர் உள்ளிட்டோர் இருக்கின்றனர். மற்றவர்கள் மாணவர்களாகவே இருக்கின்றனர். சிபி வார்டனாக இருக்கிறார்.

இந்த நிலையில் பிரியங்காவிடம் சென்று பேசும் அபிஷேக், “நீங்க மத்தவங்க கிட்ட காட்டுற அன்பில் சிலர் தான் உண்மையாக இருக்கிறார்கள். உங்களை விலைக்கு வாங்கிவிட முடியும் என்று சொல்கிறார். ஜால்ரா என்கிறார். கேவலமாக இருக்கிறது. உங்களை நிரூபிக்க இந்த வாரத்தையாவது பயன்படுத்திக் கொள்ளலாமே?” என்று குறிப்பிட்டார்.

அவருக்கு பதில் அளித்த பிரியங்கா, “இது தாமரைக்கோ இல்லை யாருக்கோ நிரூபிப்பதற்காக இல்லை.” என்று தெரிவித்திருந்தார்.  முன்னதாக தாமரை கேப்டன் ஆவதற்கு தகுதி இல்லை என்று பிரியங்கா கூறியதாக, தாமரை பிரியங்காவிடம் சண்டை போட்டார். அப்போது தாமரையிடம் தன்னுடைய அடுக்கடுக்கான கேள்விகளை பிரியங்கா முன்வைத்தார். இவர்களின் வாக்குவாதம் சற்று கடுமையாகவே சென்றது.

அதனைத் தொடர்ந்து பிரியங்கா ஒரு நபரை டார்கெட் செய்து ட்ரிகர் செய்வதாக கன்ஃபெஷன் ரூமில் ரூமில் குற்றம் சாட்டி, பிரியங்காவை, அக்‌ஷரா நாமினேட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Abhishek advise over thamarai issue priyanka answer BB5

People looking for online information on BiggBoss5, BiggBossTamil5, Eminiation, Priyanka Deshpande, Priyanka vs thamarai, Thamarai, Thamarai Selvi, Thamarai vs priyanka, Trending, Vijay Television, Vijay tv, VJ Priyanka will find this news story useful.