விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. முதல் இரண்டு சீசன்களை போல் இந்த சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் 7 பேர் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டனர். அதில், முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஃபாத்திமா பாபு முதல் நபராக வெளியேறினார்.
இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் உண்மை முகங்கள் ஒவ்வொன்றாக மக்களுக்கு தெரியவருகிறது. இந்நிலையில், இன்றைய எபிசோடிற்கான புரொமோக்கள் வெளியாகின. முதல்புரொமோவில் மீரா மிதுன் செய்த விஷயம் ஒன்றை தவறு என சுட்டிக்காட்டி லொஸ்லியா கோபமடைகிறார். அடுத்ததாக வெளியான புரொமோவில், லொஸ்லியாவுடன் இப்போ அதிகமாக பேசுகிறாய் என கவினிடம் சாக்ஷி கோபித்துக் கொண்டார்.
தற்போது 3வதாக வெளியாகியுள்ள புரொமோவில், மீண்டும் அபிராமி மதுமிதாவை குறைக்கூறுகிறார். அந்த வீடியோவில், ‘நான் பண்ணின தவறால என் குடும்பம் என் நண்பர்கள் என் மேல வச்சிருந்த விஷயம் ஷேக் ஆயிருக்கு.. தமிழ் தமிழ்னு இந்த பொண்ணு பேசுதுல, இதுல முதல நான் தான் பேசியிருக்கணும். எனக்கு உங்க கிட்ட பிரச்சனை இருக்கு மது, நீ வந்து என்கிட்ட 5 நிமிஷம் பேசணும் சொல்ற.. என்னா பேசணும் என்கிட்ட? எங்கயாது ஒரு இடத்துல தமிழ் கலாச்சாரம் எதாவது இழுப்பாங்க. அப்போ நான் வாய திறந்து பேசியே ஆகணும் மச்சான்’ என அபிராமி, சாக்ஷியிடம் கூறுகிறார்.
முடிந்த பிரச்சனையை மீண்டும் ஆரம்பிக்கும் விதமாக அபிராமி பேசும் இந்த புரொமோ, இன்றைய நிகழ்ச்சி பற்றிய கூடுதல் எதிர்ப்பார்ப்பை பிக் பாஸ் ரசிகர்களிடையே தூண்டியுள்ளது.