சென்னை, 23, பிப்ரவரி 2022: டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முந்தைய சீசன் போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட்
இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அவர் தற்போது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்க முடியாத சூழலை விவரித்து, இந்த நிகழ்ச்சியில் விலகுவதாக அறிவித்துள்ளார். அதாவது, விக்ரம் திரைப்பட பணிகள் நிறைவு பெறுவதற்காக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை வெளியிட்டார்.
அபிராமி - நிரூப் சண்டை
பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் அனைவரும் தேவர்கள் நரகர்கள் என 2 அணிகளாக பிரிந்துள்ளனர். இவர்களுக்கு இந்த டாஸ்குக்குள் அடுத்தடுத்த விளையாட்டுகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதில் அபிராமியிடம் நிரூப், “எதற்காக சும்மாவே ஒரே இடத்தில் உக்காந்துட்டு இருக்க?” என கேட்கிறார்.
டிரெஸ்ஸிங் ரூமுக்கு ஓடிய அபி
பதிலுக்கு கோபப்பட்ட அபிராமி, “நீ மொதல்ல ஒழுங்கா பண்ணு.. நான் எல்லாத்தையும் சரியாதான் பண்ணிட்டு இருக்கேன். என்னை கோவப்படுத்துறது தான் உனக்கு டார்கெட்.” என்று சொல்லி கோபத்தில் எழுந்து டிரெஸ்ஸிங் ரூமுக்கு ஓடிவிட்டார். அவரது பின்னாலேயே ஜூலி, சுருதி என அனைவரும் ஓடிச்சென்று சமாதானப் படுத்த முயற்சித்தனர்.
கதவை தாழிட்ட அபி..
ஆனால் டிரெஸ்ஸிங் ரூமுக்குள் ஓடிச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். மற்ற பெண்கள் கதவை தட்டச் சொல்லவே, பாலாஜி முருகதாஸ் ஓடிவந்து கதவை தட்டி பார்க்கிறார். ஆனால் கதவை அபிராமி முதலில் திறக்கவில்லை, பின்னர் கதவைத் திறந்துவிட்டார். அதற்குள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டுவிட்டது.