24 மணி நேரமும் டிஸ்னி+ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியிலிருந்து தற்போது வனிதா விஜயகுமார், தாமாக முன்வந்து வெளியேறியுள்ளார். இதற்கு காரணம் தன்னுடைய மன நலம் மற்றும் உடல் நலத்தை காத்துக் கொள்வதுதான் என்று குறிப்பிட்டிருந்த வனிதா, இனியும் வீட்டுக்குள் இருந்து ரிஸ்க் எடுக்க முடியாது என்றும் பிக்பாஸிடம் தெரிவித்து விட்டு சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இதுவரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நிலையில், விக்ரம் திரைப்படம் பணிகளால் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத சூழல் ஏற்பட்டதாக தெரிவித்து விலகினார். அடுத்து இந்த நிகழ்ச்சியை தற்போது நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தேவதைகள் மற்றும் அரக்கர்கள்
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தேவர்கள் அல்லது தேவதைகள் மற்றும் நரகர்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டாஸ்க்கின் படி அனைவரும் தேவர்கள் மற்றும் நகரங்களாக இரண்டு விதமான ஆடைகளை அணிந்து வலம் வருகின்றனர். இதில் நரகர்கள் என்பதை சாத்தான்கள் அல்லது அரக்கர்கள் என்றும் புரிந்து கொள்ள முடியும். இவர்கள் இருவருக்கும் இரு வேறு விதமான நிறங்களில் ஆடைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில் ஜூலி பாலாவுக்கு அடுத்தடுத்த வேலைகளை கொடுக்கிறார், ஏன் என்றால் பாலா தேவதை அணியிலும், ஜூலி அரக்கர்கள் அணியிலும் இருக்கிறார்கள். ஆனால் பாலாவுக்கு அவ்வப்போது தாமரை வந்து உதவி செய்வதற்கு முன் வருகிறார். ஜூலியிடம் பேசும் அபிராமி தனக்கு இந்த கேம் பிடிக்கவில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் பாலாவுக்கு தாமரை உதவி செய்ய வர, அவரைப் பார்த்து அபிராமி, “நீ என்ன தேவதையா.. இல்லை ..சாமரம் வீசும் தாசியா?” என்று கேட்டிருக்கிறார்.
பரபரப்பு கேள்வி.. ரசிகர்கள் கருத்து..
அபிராமி கேட்ட இந்த கேள்வி, ரசிகர்களிடையே மிகவும் பரபரப்பாகவும் சர்ச்சையையும் கிளப்பியிருக்கிறது. ஆனாலும் தாமரை இந்த கேள்விக்கு தான் ஒரு தேவதை என்பதால் கூலாக பதில் சொல்வதை காணமுடிந்தது. எனினும் அபிராமி அந்தகால பணிப்பெண்கள், தாங்கள் மிகவும் மதிக்கும் அரசர் போன்றவர்களுக்கு உதவி செய்துகொண்டே இருப்பார்கள்.
இந்த அர்த்தத்தில் தான், அதாவது பக்கவாட்டில் நின்று காற்று வருவதற்காக சாமரம் வீசும் பணிப்பெண் என்பதை அர்த்தப்படுத்தும் விதமாகவே தாமரையிடம் இந்த கேள்வியை கேட்டு இருக்கிறார் என்கிற கருத்த்தை பலரும் முன்வைக்கின்றனர். இதேபோல், தாமரையும் அபிராமி கூறிய பணிப்பெண் என்கிற அந்த அர்த்தத்தையே சரியாக புரிந்துகொண்டு, கூலாக பதில் அளித்து இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.