ROCKETRY திரைப்படத்தில் வரும் அப்துல் கலாம் கதாபாத்திரம்.. தியேட்டரில் நெகிழ்ந்து போன ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவின் நம்பர் விஞ்ஞானியாக வர வேண்டிய நம்பி நாராயணன், பொய் வழக்கு காரணமாக குற்றம் சுமத்தப்பட்டு, பல ஆண்டுகள் ஜெயிலில் வாழ்க்கையை கழித்து பின்னர் நிரபராதியாக வெளியே வந்த கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்'.

Advertising
>
Advertising

Also Read | நடிகர் கமல்ஹாசனை கவுரவப்படுத்திய அமீரகம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

பிரபல நடிகரான மாதவன், 'ராக்கெட்ரி' திரைப்படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்து, நம்பி நாராயணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம், இன்று (01.07.2022) வெளியாகி உள்ள நிலையில், மாதவன் நடிப்பு மற்றும் இயக்கம் குறித்து மக்கள் அனைவரும் ஏகோபித்த பாராட்டுக்களை வழங்கி வருகின்றனர்.

வரவேற்பை பெறும் மாதவனின் 'ராக்கெட்ரி'

அதே போல, மாதவனின் மனைவியாக நடித்துள்ள சிம்ரன் நடிப்பு, சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யா ஆகியோரின் நடிப்பும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. விக்ரம் படத்தில், Rolex ஆக சிறப்பு தோற்றத்தில் வந்த நடிகர் சூர்யா, சில நிமிடங்களே வந்தாலும் வில்லனாக மிரட்டி இருப்பார். ஆனால், ராக்கெட்ரி திரைப்படத்தில், Rolex கதாபாத்திரத்திற்கு நேர் மாறான ஒரு காதாபாத்திரத்தில் தோன்றி அசத்தி உள்ளதையும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

நாசாவில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்த போதும், அதனை புறந்தள்ளி தாய் நாடு மீது கொண்ட பற்றின் காரணமாக, இந்தியாவின் இஸ்ரோவில் பணிபுரியும் நம்பி நாராயணன், தவறான குற்றச்சாட்டால் கடும் பாதிப்புக்கு ஆளாகும் அவரின் கதையை சிறப்பாக எடுத்துள்ளதாக பலரும் மாதவனை பாராட்டி வருகின்றனர்.

அப்துல் கலாம் கதாபாத்திரம்

இந்நிலையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கதாபாத்திரமும் ராக்கெட்ரி திரைடபத்தில் வருகிறது. நம்பி நாராயணின் நெருங்கிய நண்பரான அப்துல் காலம் கதாபாத்திரம், படத்தின் பல பகுதிகளில் வந்தாலும், ஒன்று ரெண்டு இடங்களில் அப்துல் கலாம் காட்சிகள் பலரையும் உருக வைக்கும் அளவுக்கும் படத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியாக இருந்திருந்தாலும், மிகவும் சாதாரணமாகவே வாழ்ந்து உயிரிழந்து போன அப்துல் கலாமை இன்றளவிலும் பலரும் போற்றி வருகின்றனர். அப்படி ஒரு சூழ்நிலையில், ராக்கெட்ரி படத்தில் அப்துல் கலாமை கண்ட ரசிகர்கள் பலரும், ஒரு நிமிடம் நெகிழ்ந்து போனது குறிப்பிடத்தக்கது.

Also Read | 'ஓ சொல்றியா மாமா' & 'அரபிக்குத்து' பாட்டுக்கு செம்ம குத்து டான்ஸ் ஆடிய சன்னி லியோன்! வேறலெவல் VIDEO

தொடர்புடைய இணைப்புகள்

Abdul kalam scenes in madhavan rocketry the nambi effect movie

People looking for online information on Abdul kalam scenes Rocketry, Madhavan, Rocketry movie, Rocketry the nambi effect movie will find this news story useful.