சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு அளித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மரண மாஸ் படத்தை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர். விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.
படத்தை பார்த்த பலருக்கும் ஒரு காட்சி புல்லரித்திருக்கும். ஆம் சூரரைப் போற்று படத்தில் இடம் பெற்ற அய்யா அப்துல் கலாமின் காட்சி பார்ப்பதற்கே நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த படத்தில் அப்துல் கலாம் அய்யாவிற்கு குரல் கொடுத்தவர் KPY நவீன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அச்சு அசல் அப்துல் கலாமாக நடித்தவர் யார் என்பது பலருக்கும் தெரியாது.
அவர் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஷேக் மைதீன் என்பவர். முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் தோற்றத்தை பெற்றிருந்த அவர், கலாமின் மீது கொண்ட பற்றின் காரணமாக சிகை அலங்காரம் மற்றும் தோற்றத்தை அப்படியே மாற்றி கொண்டார். இவர் உடுமலை கலாம் என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் சூரரைப் போற்று படத்தில் நடித்த அவர், படத்தை பார்ப்பதற்கு முன்பே இயற்கை எய்திவிட்டார் என்பது மனதை உருக்கும் விஷயம்.