"பொண்ணு நான் ரெடி.. மாப்பிள எங்கய்யா??..." நடிகை ஆத்மிகாவின் பதிவு.. கிளம்பிய ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசை அமைப்பாளராக இருந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, 'மீசைய முறுக்கு' என்னும் திரைப்படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகி இருந்தார்.

Advertising
>
Advertising

ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ் நடிக்கும் ’பேபி’… செம்ம அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்ததை போல, படத்தில் வரும் 'வாடி புள்ள வாடி' பாடல் தொடங்கி, படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்திருந்தது.

அதே போல, மீசைய முறுக்கு படத்தின் மூலம், நாயகியாக அறிமுகமான நடிகை ஆத்மிகாவுக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து, விஜய் ஆண்டனியுடன் அவர் நடித்திருந்த கோடியில் ஒருவன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. இதற்கு மத்தியில், நரகாசூரன், காட்டேரி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து முடித்துள்ளார்.

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவ்

ஆனால், இந்த படங்களின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதனிடையே, முகேன் ராவுடன் இணைந்து, 'மயக்குறியே' என்ற மியூசிக் ஆல்பம் ஒன்றிலும் ஆத்மிகா தோன்றி இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆத்மிகா நடித்து இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகி இருந்தாலும், அவருக்கான Craze கொஞ்சம் கூட குறையாமல் இருந்து வருகிறது. இதற்கு காரணம், எப்போதும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கதினை புகைப்படங்கள் மற்றும் தினசரி நிகழ்வுகளால் ஆத்மிகா நிரப்பி வைத்திருப்பதால் தான்.

ஒரு பக்கம், Traditional உடையில் புகைப்படங்களை பகிர்ந்தால், அடுத்து மாடர்ன் உடையில் புகைப்படங்களை பகிர்வார். கிளாமர் மற்றும் க்யூட்டான புகைப்படங்களை ஆத்மிகா பகிரும் கொஞ்ச நேரத்திலேயே, ரசிகர்கள் ஹார்ட்டினை அள்ளிவிட, ட்ரெண்டிங் லிஸ்டிலும் புகைப்படங்கள் வந்து விடும்.

மணப்பெண் கோலத்தில் ஆத்மிகா

இதனிடையே, ஆத்மிகா புதிதாக பகிர்ந்துள்ள சில புகைப்படங்கள், தற்போது அதிகம் வைரலாகி, இன்னொரு பக்கம் அதிகம் குழப்பத்தையும், கேள்விகளையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. மணப்பெண் கோலத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்ட ஆத்மிகா, இது தொடர்பாக நடந்த போட்டோஷூட் படங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

மாப்பிள்ளை எங்க பாஸ்?

இதில், இன்ஸ்டாவில் பகிர்ந்த மணப்பெண் கெட்அப் புகைப்படத்தில், "பொண்ணு ரெடி, மாப்பிள்ளை எங்கே?" என கேப்ஷனில் ஆத்மிகா குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தான் தற்போது, ரசிகர்கள் மத்தியில் கேள்வியை உருவாக்கி உள்ளது. இன்னொரு பக்கம், ரசிகர்கள் பலர், 'மாப்பிள்ளை ரெடி, இதோ வந்துட்டோம்' என்றும் கும்பலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் சிலர், ஆத்மிகா அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளாக கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். என்ன காரணமாக இருந்தாலும், மாப்பிள்ளை எங்கே என ஆத்மிகா குறிப்பிட்டுள்ள புகைப்படம், தற்போது அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

சன்னி லியோன் பேயாக நடிக்கும் Oh My Ghost… விஜய் சேதுபதி & வெங்கட் பிரபு வெளியிடும் First look

தொடர்புடைய இணைப்புகள்

Aathmika photo in wedding look fans got confused

People looking for online information on Aathmika, Aathmika Latest pictures, Meesaya Murukku, Wedding look will find this news story useful.