தமிழில் முக்கிய இளம் நடிகரான ஜெயம் ரவி ஜெயம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் எம்.குமரன் S/O மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய திரைப்படங்களில் நடித்த ஜெயம் ரவி குடும்ப திரைப்படங்கள், காதல் திரைப்படங்கள், ஆக்ஷன் திரைப்படங்கள், சமூக நோக்கிலான திரைப்படங்கள் என பல படங்களில் நடித்துள்ளார்.
Also Read | "வேலையாவே இருந்துட்டேன்.. நண்பர்களே இல்லை.. எங்க போய் நட்பை தேடுவேன்.!” - செல்வராகவன் உருக்கம்..
கடந்த வருடம் செப்டம்பர் 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். அதாவது இந்த திரைப்படத்தின் கதையின் நாயகனான பொன்னியின் செல்வன் என்கிற ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இதனை தொடர்ந்து அகிலன், இறைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அகிலன் திரைப்படம் வரும் மார்ச் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
முன்னதாக நடிகர் ஜெயராமனுடன் சேர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டிச்சென்று நடிகர் ஜெயம் ரவி வழிபட்டுவந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
பின்னர் தன் மனைவி மகன்களுடன் பொங்கல் கொண்டாடிய ஜெயம் ரவி, “அன்பு பொங்க ஆசை பொங்க இன்பம் பொங்க இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்” என தெரிவித்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, தன் மனைவியுடன் தாஜ்மஹான் சென்றிருந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இவற்றை தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி, பிப்ரவரி 14-ஆம் தேதி, காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
Also Read | இந்த படத்துக்கும் அருண் விஜய் நிஜ வாழ்வுக்கும் இவ்ளோ கனெக்ட் இருக்கா..? வைரல் Throwback ஃபோட்டோ..