நேற்றைய தினம் பிக்பாஸில் வாக்குவாதங்கள் முற்றி மோசமான சம்பவங்கள் நடைபெற்றது. ஆரியை அனைத்து போட்டியாளர்களும் டார்கெட் செய்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆரம்பத்தில் ரியோ, பாலா இருவருக்கும் சில சமயங்களில் வாக்குவாதம் முற்றி பிரச்சினைகள் வந்தது. ஆனால் நேற்றைய தினம் ரியோவுக்காக பேசுகிறேன் என்று பாலா ஆரியை போட்டு கொடுத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்பு ரம்யா, அர்ச்சனா, நிஷா, கேபி, அனிதா, சனம் போன்ற மற்ற போட்டியாளர்களும் அவருக்கு விரோதமாக எழும்பி நின்றனர். இந்நிலையில் ஆரி தனி ஆளாக நின்று போராடினார். பின்பு பாலா தனிமையில் இருந்த ஆரியின் கால்களில் விழுந்தார். எனினும் ஆரி இந்த சம்பவத்தால் மிகவும் மனம் உடைந்து விட்டார். இந்நிலையில் ஆரிக்கு ஆதரவாக ரசிகர்கள் பதிவிட்டு வர, அவர் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆரி தனது அப்பாவுடன் இருக்கும் இளமை பருவ போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.