சமூக வலைதளங்களில் ஆரி ஆர்மியும் பாலாஜி ஆர்மியும் மீண்டும் மோதிக்கொள்ள ஆரம்பித்து இருக்கின்றன. கடந்த வாரம் பிரீஸ் டாஸ்க்கை சரியாக விளையாடிய ஆரி மீண்டும் சக போட்டியாளர்களால் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் பாலாஜியும் சேர்ந்து கொள்ள ஜெயிலே கதறும் அளவுக்கு இருவரும் சண்டை போட்டு கொண்டனர்.
இதில் ஆரி அமைதியாக பிரச்சினையை எதிர்கொள்ள பாலாஜி கண்டபடி கத்தி கடைசியில் மைக்கையும் உடைத்து விட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே நேரம் சிறந்த போட்டியாளர்களாக ஆஜீத், ரியோ, சோம் மூவரும் தேர்வு செய்யப்பட்டு கேப்டன் பதவிக்கு போட்டியிட்டனர்.
இதில் பிக்பாஸ் அளித்த டாஸ்க்கில் ரியோ கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் நன்றாக விளையாடிய ஆரி மோசமான பெர்பார்மரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பாலாஜி, ஆரி இருவரில் தவறு யார் மீது உள்ளது எனவும் வாக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். ரெண்டு பேருல யார் செஞ்சது தப்புன்னு நீங்க நெனைக்கறீங்க?