இதற்கு அந்த கோழி-நரி டாஸ்க்கே பரவாயில்லை என அந்த டாஸ்க்கை திட்டியவர்கள் கூட நேற்று பாராட்டி விட்டனர். இதுதான் பிக்பாஸோட ஸ்ட்ராட்டஜி. போட்டியாளர்கள் இரண்டு அணியினராக பிரிந்து விளையாடிய டாஸ்க்கின் பெயர் கேட்ச் பால். ஆரி, சோம் தலைமையில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்தனர். வீட்டின் தலைவர் பாலாஜி பாட்டிலை சுத்திவிட்டு ஆரி அணியில் இணைந்தார்.
டாஸ்க் தொடங்கியது முதலே இரு அணியினருக்கும் வாய்க்கால் தகராறு தான். அவன் என் கைய புடிச்சான். என்ன தள்ளி விட்டான். ரொம்ப பக்கத்துல நிக்குறாங்க என ஆளாளுக்கு புகார் சொல்லி அடித்து கொண்டனர். இதை வைத்து பிக்பாஸ் அடுத்தடுத்த கண்டெண்ட்டை தயார் செய்து கொண்டிருந்தார். ஆரி அணியில் பிளான் எல்லாம் பக்காவாக போட்டும் கூட சொதப்பி விட்டனர்.
போதாததற்கு பாலாஜி வேறு இரண்டு சிவப்பு பந்துகளை தன்னுடைய பாணியில் பிடித்து மொத்த பாயிண்ட்ஸ்க்கும் சங்கு ஊதிவிட்டார். இந்த டாஸ்க்கில் சோம், ஆரி, ரியோ, பாலாஜி ஆகியோருக்கு இடையில் அடிக்கடி உரசல்கள் நிகழ்ந்தன. இதுகுறித்து பின்னர் தன்னுடைய அணியிடம் பேசிய ஆரி, பாலாஜியிடம் சோம் என்ன செய்தாலும் ஸாரி மச்சான் என சொல்லியே எஸ்கேப் ஆகிருவான் என சொல்ல, அவரும் அதேபோல செய்தார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் எப்படி இவ்வளவு சரியா சொன்னீங்க? என அவரை பாராட்டி வருகின்றனர். சோம் டீம் லீடிங்கில் இருப்பதால் இன்று போட்டி மேலும் உக்கிரமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.