பிக்பாஸ் 50-வது நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் கமல் அனைவரும் 1 நிமிடம் பேசுமாறு கூறினார். போட்டியாளர்கள் தங்கள் பிக்பாஸ் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அப்போது அர்ச்சனா நான் இந்த வீடு ஒரு கூட்டு குடும்பமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அனைவரையும் சமமாக தான் நடத்துகிறேன். என்று பேசினார்.

இந்த நிலையில் ரசிகர்கள் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஆரி அர்ச்சனாவிடம் நான் மட்டன் சாப்பிட மாட்டேன் என்று கூறி அரை வெங்காயம் தனியாக எடுத்து கொள்கிறேன் என்று சொல்கிறார். பதிலுக்கு அர்ச்சனா தயிர் கம்மியா தான் இருக்கு என்பது போல் எல்லாம் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
பின்னர் ஜித்தன் ரமேஷ் அங்கு வரும்போது அவரிடமும் இந்த அரை வெங்காயம் குறித்து பேசுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் இதுதான் எல்லாரையும் சமமா நடத்துறதா? நீங்க வந்ததுல இருந்து கிச்சன் டீம்ல தான் இருக்கீங்க. ஆரி கேப்டனா இருந்தப்போ மட்டும் தான் வேற டீம்ல இருந்தீங்க என கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.