ஆமிர்கான் & நாக சைதன்யா சென்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம்..! வெளியான புகைப்படங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆமிர் கான் & நாக சைதன்யா இணைந்து தேசிய போர் நினைவிடம் சென்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

ஆமீர் கான், நாக சைதன்யா மற்றும் மோனா சிங் உள்ளிட்ட லால் சிங் சத்தாவின் நடிகர்கள் தங்களின் திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்றனர்.

லால் சிங் சத்தா

ஆமீர் கான், நாக சைதன்யா மற்றும் மோனா சிங் ஆகிய நடிகர்கள் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் இந்திய போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். நாக சைதன்யா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் வருகையின் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நாக சைதன்யா, “புது டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் லால்சிங் சத்தா குழுவினருடன் காலைப்பொழுது செலவிடப்பட்டது. அத்தகைய அழகான அனுபவம்" என கூறியுள்ளார்.

கார்கில் போரில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களின் பெயர்கள் குறிக்கப்பட்ட சுவரின் முன் ஆமீர் கான் கூப்பிய கைகளுடன் காணப்படுகிறார். மற்ற படங்களில், மோனா சிங்கும் சைதன்யாவும் ஒரே இடத்தில் மரியாதை செலுத்துவதைக் காணலாம். மற்றொரு படத்தில், ஆமீர் சில இந்திய ராணுவ வீரர்களுடன் உரையாடுவதைக் காணலாம்.

1994 ஆம் ஆண்டு வெளியான FORREST GUMP திரைப்படத்தின் ரீமேக்கில் (லால்சிங் சத்தா) டாம் ஹாங்க்ஸ் நடித்த  கம்ப் கதாபாத்திரத்தில் ஆமீர் கான் நடித்துள்ளார். இந்த லால்சிங் சத்தா படத்தில் ஆமீர் கானுடன் கரினா கபூர் கதாநாயகியாக ராபின் ரைட் பாத்திரத்தில் நடிக்கிறார். 

அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது நிறுவனம் வழியாக தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. 

இந்த படத்தில் நாக சைதன்யா, பாலராஜூ எனும் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா ராணுவ வீரனாக நடித்துள்ளார். நடிகர் ஆமிர் கான் லால் சிங் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரூபா எனும் கதாபாத்திரத்தில் நடிகை கரீனா கபூர் நடிப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படம் வருகிற 11 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Aamir Khan Naga Chaitanya visited National War Memorial in Delhi

People looking for online information on Amir khan, Laal Singh Chaddha, Naga chaitanya will find this news story useful.