பிரபல நடிகர் வீட்டில் ஆமிர்கான் படத்தின் SPECIAL SHOW! யாரெல்லாம் வந்திருக்காங்கனு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆமிர் கான் நடிப்பில் FORREST GUMP படத்தின் ரீமேக் ஆன லால் சிங் ஷத்தா படம் ஆகஸ்ட் 11 அன்று ரிலிசாகிறது. 

Advertising
>
Advertising

Also Read | இந்த வாரம் பிரபல ஒடிடிக்களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள்.. முழு தகவல்!

1994 ஆம் ஆண்டு வெளியான FORREST GUMP திரைப்படத்தை ராபர்ட் ஜெமிக்ஸ் இயக்கினார். இவர் 'Back to the Future' சீரிஸ் படங்களை இயக்கிவர், 677 மில்லியன் டாலர் வசூல் செய்து 13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 6 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய படம் இது.

சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. டாம் ஹாங்க்ஸ் நடித்த FORREST GUMP கதாபாத்திரத்தில் ஆமீர் கான்  நடிக்கிறார்.  ஆமீர் கானுடன் கரினா கபூர் கதாநாயகியாக ராபின் ரைட் பாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு மாற்றாக நாக சைதன்யா முக்கிய ராணுவ வீரர் வேடத்தில் நடிக்கிறார். அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது நிறுவனம் வழியாக தயாரித்துள்ளார்.

இந்த படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது, அதனை முன்னிட்டு முதல் லுக் POSTER வந்து நல்ல வரவேற்பை பெற்றது, இச்சமயத்தில் இந்த லால் சிங் ஷத்தா படத்தின் வெளியீட்டை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு படக்குழு ஒத்தி வைத்தது, இதற்கான அறிவிப்பை POSTER வழியாக வெளியிட்டது.

அதன் படி தமிழ் புத்தாண்டான ஏப்ரல் -14 அன்று இந்த படம் KGF-2, பீஸ்ட் படங்களுடன் ரிலீஸ் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக இப்படம் இப்போது 11 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தில் ராணுவ வீரராக பெஞ்சமின் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடித்துள்ளார். இந்நிலையில் ஹைதராபாத்தில் ஆமீர் கான் சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்து, இதில் தெலுங்கு திரையுலகின் பல நட்சத்திரங்களை கலந்து கொள்ள வைத்துள்ளார். சிரஞ்சீவியின் இல்லத்தில் இந்த சிறப்புக்காட்சியை ஆமீர்கான் நடத்தினார். இந்த திரையிடலில் சிரஞ்சீவியுடன், நாகார்ஜுனா மற்றும் அவரது மகன் நாக சைதன்யா, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் சுகுமார் போன்ற திரைப்பட இயக்குனரும் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு லடாக்கில் 40 நாட்கள் படமாக்கப்பட்டது, அங்கு ஆமீர் கான் மற்றும் நாக சைதன்யாஉடன் போர் காட்சிகளை படமாக்கினர். பெஞ்சமின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக முன்னர் கூறப்பட்டது, ஆனால் அவருக்கு பதிலாக நாக சைதன்யா நடித்துள்ளார்.

Also Read | இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்.. ஒரு பார்வை!

தொடர்புடைய இணைப்புகள்

Aamir Khan Laal Singh Chaddha Special Screening at Chiranjeevi Home

People looking for online information on Aamir Khan, Chiranjeevi, Laal Singh Chaddha will find this news story useful.