'கனா', 'நட்பே துணை' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாகக் கொண்டு படங்களின் அறிவிப்பு தொடர்ந்து வெளியாகத் தொடங்கியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'தளபதி 63' படமும் ஸ்போர்ட்ஸை அடிப்படையாகக் கொண்டு உருவாவதாக கூறப்படுகிறது. மேலும் கதிர் நடிக்கும் 'ஜடா' படமும் ஃபுட் பாலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருகிறது.
மேலும் சுசீந்திரனின் 'கென்னடி கிளப்', 'வெண்ணிலா கபடிக் குழு 2' படங்கள் என நாளுக்குநாள் அறிவிப்புகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக 'ஈரம்', 'மிருகம் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஆதியும் ஒரு ஸ்போர்ட்ஸ் படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை பிரித்வி என்கிற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்ய, ராகுல் எடிட் செய்கிறார். தமிழ் தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்கபாக பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார்.