VIDEO: சமந்தாவை பார்த்ததும் சந்தோஷத்துல திக்குமுக்காடிய ரசிகர்! நெகிழ்ந்து போன SAMMU

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹைத்ராபாத்: நடிகை சமந்தாவை பார்த்த்தும் ரசிகர் ஒருவர் இன்ப அதிர்ச்சியில் செய்யும் செயல்கள் வீடியோ வடிவில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார்.  சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது.

சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார்.

விவாகரத்துக்கு பின் தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் சமந்தாவை பார்த்த ரசிகை மகிழ்ச்சியில் சமந்தாவை கட்டி அணைத்து முத்தம் கொடுத்துள்ளார். முத்தத்தை சமந்தாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சமந்தா. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மற்ற Cast & Crew விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

VIDEO: சமந்தாவை பார்த்ததும் சந்தோஷத்துல திக்குமுக்காடிய ரசிகர்! நெகிழ்ந்து போன SAMMU வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

A women fan kissed actress samantha ruth prabhu

People looking for online information on A women fan kissed, Samantha, Samantha ruth prabhu, Sammu will find this news story useful.