கொரோனா வைரஸ் போராளிகளுக்காக இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது இந்த இக்கட்டான நிலையில் மக்கள் பணி செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

இதன் காரணமாக மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் அதற்கெல்லாம் கலங்காமல் மக்கள் நலன் ஒன்றே நோக்கம் என அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் தன் நலமற்ற சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரபலங்கள் பலரும்  பதிவுகள் எழுதி வருவதை காண முடிகிறது.

அந்த வகையில் இசைஞானி இளையராஜா எழுதி, இசையமைத்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். இந்த பாடலில் லிடியன் நாதஸ்வரம் கீபோர்டு வாசித்துள்ளார். இந்த பாடலை கொரோனா வைரஸில் இருந்து நம்மை காக்கும் போராளிகளுக்கு சமர்பணம் செய்துள்ளார். இந்த பாடல் ஹிந்தியிலும் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் போராளிகளுக்காக இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான பாடல் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

A Tribute Song to the Coronavirus Warriors by the Maestro Ilaiyaraaja | கொரோனா வைரஸ் போராளிகளுக்காக இளையராஜாவின் பாடல் வைரல்

People looking for online information on Coronavirus, Covid 19, Ilaiyaraaja, SP Balasubramaniam will find this news story useful.