ரஹ்மான் –ரஜினி- SPB காம்போன்னா சும்மாவா… ஹாலிவுட் வெப் சீரிஸில் தமிழ் பாட்டு…VIRAL VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் வெளியான மிஸ் மார்வெல் வெப் தொடர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Advertising
>
Advertising

மிஸ் மார்வெல்லில் ரஜினி பாட்டு…

இமான் வெள்ளணி முக்கிய வேடத்தில் நடித்துள்ள Ms Marvel வெப் தொடர் சமீபத்தில் OTT தளத்தில் வெளியானது. நியு ஜெர்ஸ்யில் வளர்ந்து வரும் பாகிஸ்தானிய-அமெரிக்க இளம்பெண் கமலா கானின் சாகசங்களை இப்படம் விவரிக்கிறது. உலகம் முழுக்க ரசிகர்களைக் கவர்ந்து வரும் இந்த வெப் தொடரில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியான ஒரு தருணம் அமைந்துள்ளது.

இந்த தொடரின் முதல் எபிசோடில் , ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எஸ் பி பி பாடிய தமிழ் பாடலான 'ஓ நண்பா' பாடல் ஒலிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி- ரஹ்மான் – SPB

90 களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தின் பல படங்களுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்தார். அந்த படங்களின் பல பாடல்கள் எவர்கிரீன் ஹிட் பாடல்களாக அமைந்தன. அதிலும் குறிப்பாக ரஜினி படத்தில் ரஹ்மான் இசையில் எஸ் பி பி பாடிய பாடல்கள் ரசிகர்களைப் பெரிய அளவில் கவர்ந்தவை. ரஜினி நடிப்பில் உருவான லிங்கா படத்தின் ’ஓ நண்பா நண்பா’ பாடலும் அந்த ஹிட் பாடலில் ஒன்றாக அமைந்தது.

தொடர்புடைய இணைப்புகள்

A R Rahman linga song used in Miss Marvel web series

People looking for online information on A R Rahman, Miss marvel, O nanba, SPB will find this news story useful.