இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
தமிழ், இந்தி சினிமா படங்களின் வெற்றிக்கு A. R. ரஹ்மானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக சொல்லனும் என்றால் இந்தியில் ராக் ஸ்டார், லகான், தமாஸா, ரங்கீலா ஆகியன. தமிழில் நியூ, காதல் தேசம், காதலர் தினம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகியன.
தமிழில் ரோஜா, இருவர் போன்ற படங்கள் தொடங்கி, பாலிவுட்டிலும் முன்னணி நட்சத்திரங்கள், கலைஞர்களுடன் இணைந்து முன்னணி திரைப்படங்களில் இசையமைத்து புகழ்பெற்றவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அவற்றுக்காக ஆஸ்கார் விருதுகள் வரை பல விருதுகளையும் பெற்றவர்.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, அயலான் ஆகிய முக்கிய படங்களில் பணியாற்றுகிறார்.
இதில் இயக்குனர் மாரிசெல்வராஜின் மாமன்னன் படமும் குறிப்பிடத்தக்கது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், சமீப காலமாக துபாயில் தங்கி இருந்து தனது இசைப்பணிகளை கவனித்து வருகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீன் என்கிற மகனும் காதீஜா மற்றும் ரஹிமா ஆகிய மகள்களும் உள்ளார்கள். இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணமக்கள் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.
மணமகன் ரியாஸ்தீன் ஷேக் முகமது பிரபல சவுண்ட் என்ஜினியர் ஆவார். இவர் Waves Audio மற்றும் Audinate போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய சான்றளிக்கப்பட்ட பொறியாளர். இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அமித் திரிவேதி ஆகியோருக்கு ரியாஸ்தீன் நேரடி ஒலி பொறியாளராக பணியாற்றியவர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://www.behindwoods.com/bgm8/