தனுஷ் படத்தின் மூலம் இந்திய சினிமாவிலே முதன்முறையாக A R ரஹ்மானுக்கு கிடைத்த கௌரவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் இந்தியில் மீண்டும் நடித்துள்ள படம் அத்ரங்கி ரே.

கலாட்டா கல்யாணம்

A R Rahman comment on Atrangi Re Movie Dir Anand L Rai
Advertising
>
Advertising

A R Rahman comment on Atrangi Re Movie Dir Anand L Rai

இந்த படத்தின் தமிழ் வெளியீட்டிற்கு கலாட்டா கல்யாணம் என பெயரிடப்பட்டுள்ளது. அத்ரங்கி ரே’ படம் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் சென்ற டிசம்பர் மாதம் 24 ஆம் நாள் கிறிஸ்மஸ் பாண்டிகையை முன்னிட்டு வெளியானது‌.

இசைப்புயல் ARR

A R Rahman comment on Atrangi Re Movie Dir Anand L Rai

நடிகை சாரா அலிகான், நடிகர் அக்ஷய் குமார் தனுஷடன் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் முடிந்த பின்னர் வழக்கம் போல a film by என இயக்குனரின் பெயர் இடம் பெறும். அது தான் உலக சினிமாக்களில் வாடிக்கையான நிகழ்வு. ஆனால் இந்த கலாட்டா கல்யாணம் எனும் Atrangi Re படத்தில் a film by என இசைப்புயல் A. R. Rahman அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவில் அரிய நிகழ்வான இதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இசைப்புயல் பெருமிதம்



இது குறித்து ரசிகர் ஒருவர்  A R ரகுமானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்னூட்டம் செய்து கேள்வி எழுப்பினார். அதில் அத்ரங்கி ரே படத்தை பார்த்து பரவசம் அடைந்ததாகவும், படத்தின் இசை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும் கூறியுள்ளார். அதிலும் படம் முடிந்த பிறகு A Filim By A R Rahman என்று போட்டது இதயம் கனிந்த செயல் என்றும் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் இந்திய சினிமாவில் இன்னும் பல ஆனந்த் ராய்க்கள் வேண்டும் என்றும் இசையமைப்பாளர்கள் மீது ஆனந்த் ராய் வைக்கும் நம்பிக்கையும் மரியாதையும் நம் வேலையை இன்னும் மெனக்கெட்டு செய்ய தூண்டுகோலாக அமையும் என்று கூறியுள்ளார்.

படப்பிடிப்பு ஊர்கள்



இந்த படத்தை டி-சீரிஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், கலர் யெல்லோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.


ராஞ்சனா (அம்பிகாபதி) படத்தின் மூலம் நடிகர் தனுஷை 2013 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகப்படுத்திய  இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இந்த படத்தை இயக்கியுள்ளார். மதுரை மற்றும் வட இந்திய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

A R Rahman comment on Atrangi Re Movie Dir Anand L Rai

People looking for online information on A R Rahman, ARR, Atrangi Re Movie Dir Anand L Rai, தனுஷ், Music Director will find this news story useful.