தளபதி விஜய் கேரளாவுக்கு போனாரா? விஜய் மாதிரியே இருக்காரே... குழப்பமான ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளத்திலும் ரசிகர்கள் உள்ளனர்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் கடைசியாக திரையில் காணப்பட்டார். இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்திருந்தனர். கோவிட் ஊரடங்குக்குப் பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான படங்களில் ஒன்றாக இந்தப் படம் இருந்தது.

நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் (Beast) படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். 

இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதுவரை 4கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ளன.

இந்நிலையில் பாலக்காட்டில் விஜய் போல தோற்றமுள்ள ஒரு நபர், சிறுவர்களுடன் எடுத்த புகைப்படம் டிவிட்டரில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த்து விஜய் ரசிகர்கள் குழப்பமடைந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.

 

Tags : Vijay

தொடர்புடைய இணைப்புகள்

A picture of the vijay look-alike standing with children

People looking for online information on Vijay will find this news story useful.