விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 3 சீசன் வெற்றியை தொடர்ந்து நான்காம் சீசன் வரும் அக்டோபர் 4-ம் தேதி துவங்க உள்ளது. இதனை அடுத்து விஜய் டிவியின் பிரபல சீரியல் பலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இரவு 9:30மணிக்கு ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே தொடர் இரவு 7 :30 மணிக்கும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தேன்மொழி பி.ஏ தொடர் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பலரது விருப்பமான தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இதற்க்கு முன்பு ஒரு மணி நேரம் ஒளிபரப்பானது. ஆனால் இனி 8 - 8:30 மணி வரைக்கும், பாரதிகண்ணம்மா எட்டரை மணி முதல் ஒன்பது மணி வரைக்கும் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Tags : Vijay tv, Pandiyan Stores