விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த தொடரில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமா நிஜத்திலும் கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் அவருக்கு தொடரில் உள்ள நடிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது மிகவும் வைரலானது.

வளைகாப்பு நிகழ்ச்சி அன்று 3 மணி நேரம் தொடர் ஒளிபரப்பாக நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதற்கு கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து தற்போது நடிகை சித்ரா ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இனிவரும் நாட்களில் பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சி ஒரு மணி நேரமாக ஒளிபரப்பபட போகிறது. இந்த செய்தி ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சித்ரா கூறியபடி மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் குமரன் முல்லை காட்சிகள் இனி அதிகமாக இருக்கும் என்பது போல் தெரிகிறது. இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.