இப்படியும் உலக சாதனை பண்ணலாமா? பிரபல சூப்பர்ஹிட் தமிழ் படத்தை 50 முறை பார்த்த ரசிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தமிழ் திரைப்படத்தை ரசிகர் ஒருவர் 50 முறை தியேட்டரில் மட்டும் பார்த்து உலக சாதனை படைத்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | VIDEO: "AK61 LOADING"..ஹெலிகாப்டரில் அஜித்! பிரபல வில்லன் நடிகர் பகிர்ந்த வைரல் புகைப்படங்கள்!

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸானது. 100 நாட்களை கடந்தும் சில திரையரங்குகளில் 'விக்ரம்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.  அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்தது.

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதற்காக கமல்ஹாசன், சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது.

இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு'லெக்ஸஸ்'ரக காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.

இந்த படத்தின் ஓடிடி மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த கமல் ரசிகர் உதயபாரதி என்பவர் விக்ரம் படத்தை ரிலீசான நாளில் இருந்து 50 முறை தியேட்டரில் மட்டும் பார்த்து உள்ளார். சமீபத்திய 100வது நாளில் 50-வது தடவையாக விக்ரம் படத்தை கண்டுகளித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த ரசிகர் வெளியிட்டுள்ளார். மேலும் லிங்கன் சாதனை புத்தகத்திலும் இந்த சாதனை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "பாகுபலி" இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படம்..!! ‌‌ இந்த ஜானரா?! செம்ம..

தொடர்புடைய இணைப்புகள்

A fan watched Kamal Haasan Vikram Movie 50 times

People looking for online information on Fan watch Vikram Movie 50 times, Kamal Haasan, Kamal Haasan Fan, Vikram will find this news story useful.