விஜய் சேதுபதி நடித்த 96.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ! - 'அந்த எமோஷனல் சீனுக்கு பின்னால்...'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 96. இத்திரைப்படத்தை ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் இயக்கினார். காதலை மையப்படுத்தி உருவான இத்திரைப்படம் அதன் பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக கொண்டாடப்படுகின்றது. மேலும் இத்திரைப்படத்தின் தெலுங்கு ரிமேக்கில் சமந்தா நடித்திருந்தார். 

இந்நிலையில் 96 படத்தில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை இயக்குநர் பிரேம் குமார் வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி - திரிஷா பேசிக்கொள்ளும் எமோஷனல் காட்சிக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். மிக ஜாலியாக படப்பிடிப்பில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இருக்கும் இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் சேதுபதியின் 96 ஷூட்டிங் வீடியோ | vijay sethupathi trisha's 96 shooting spot video goes viral

People looking for online information on 96 Tamil, Shooting Spot Video, Trisha Krishnan, Vijay Sethupathi will find this news story useful.