'மெர்சல்' படத்துக்கு விஜய் - அட்லி இணையும் படம் 'தளபதி 63'. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
கால் பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் இருந்து தற்போது புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி 96 பட புகழ் வர்ஷா பொல்லமா 'தளபதி 63' படத்தில் பெண்கள் கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் ஏற்கனவே அறிவித்தது போல, இந்த படத்தில் 'மேயாத மான்' இந்துஜா, ரெபா மோனிகா ஜான், மற்றும் ரோபோ ஷங்கரின் மகளும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.