93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வு சமூக இடைவெளியுடன் நடக்கிறது.
இதில் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை நோமேட்லாண்ட் (nomadland) படத்துக்காக சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் (Chloé Zhao) பெற்றார்.
இதேபோல் சிறந்த துணை நடிகைக்கான விருதினை மினரி (Minari) படத்துக்காக யூ ஜங் யோன் (Yuh-Jung Youn) பெற்றார்.
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை தி பாதர் (The Father) படத்துக்காக கிறிஸ்டோபர் ஹாம்ப்டன் மற்றும் புளோரியன் ஜெல்லர் பெற்றனர்.
தவிர சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்காக Tenet படத்துக்கும், முழுநீள ஆவணப்படத்துக்காக மை ஆக்டோபஸ் டீச்சர் (My Octopus Teacher) படத்துக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
Tags : Oscars, Oscars2021, Movies, Awards, OscarAwards, OscarsAwards2021, Trending