சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்று சந்திரமுகி.
கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இந்த படத்தை பி.வாசு இயக்க, சூப்பர் ஸ்டார் தவிர, இந்தப் படத்தில் பிரபு, நாசர், வடிவேலு, ஜோதிகா மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த படத்தில் ‘அத்திந்தோம்’ இடம் பெற்றது, இதில் பொம்மி எனும் குட்டி பெண்ணாக காணப்பட்டவர் தான் பிரஹர்ஷேதா சீனிவாசன். இந்தப் படத்தைத் தவிர, அவர் பல திரைப்படங்கள் மற்றும் 90களில் புகழ் பெற்ற வேலன் உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இப்போது, இவர் தனது முதல் குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாக தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆம், இதுபற்றிய தமது பதிவில், "இந்த வாழ்நாள் முழுவதும் எனக்கு வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி ... என்னை முழுவதும் ஆதரித்த அனைத்து மக்களுக்கும் நன்றி .." என குறிப்பிட்டு தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்துள்ளார்.
இதை பார்த்த பலரும், “நாம் குழந்தையா பார்த்த பொம்மிக்கே இப்போ குழந்தை பிறக்கப் போகுதே.. அடடே..” என வியந்து பேசி வருகின்றனர்.