பிரபல 90'ஸ் சீரியல் நடிகர் BARATHI KANNAMMA-வில் என்ட்ரி.. அதுவும் இப்படி ஒரு மாஸ் 'INTRO'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' சீரியல், தற்போது அடுத்தடுத்து எமோஷனல் காட்சிகளாக சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

மொட்டைத் தலையுடன் பிரபல நடிகை.. "ஏன் இப்டி?.." குழம்பிய ரசிகர்கள்.. நடிகை சொன்ன விளக்கம்

லட்சுமிக்கு பாரதி குறித்த அனைத்து விஷயங்களும் தெரிய வர, எப்போதும் தந்தை அருகே இருக்க முயற்சி செய்கிறார் அவர்.

அது மட்டுமில்லாமல், இன்னொரு படி மேலே சென்று, தாய் கண்ணம்மாவை மீண்டும் பாரதியுடன் சேர்த்து வைப்பதிலும் மும்முரமாக இருந்து வருகிறார் லட்சுமி.

ஏங்கும் குழந்தைகள்

இன்னொரு பக்கம், ஹேமாவையும் தன்னுடைய தங்கையாக ஏற்றுக் கொண்டு இருவரும் அன்புடன் இருந்து வருகின்றனர். பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் ஏற்கனவே கணவர் மனைவியாக வாழ்ந்து பின்னர் சந்தர்ப்ப சூழல்நிலையின் காரணமாக பிரிந்தது பற்றி, ஹேமாவுக்கு எதுவும் தெரியாது. இதனையடுத்து, கண்ணம்மாவை சந்தித்து பேசும் ஹேமா, தன்னுடைய தந்தை பாரதியிடம் இணைந்து வாழும் படியும் கேட்டுக் கொள்கிறார். இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறார் கண்ணம்மா.

என்ட்ரி கொடுத்த 90'ஸ் சீரியல் நடிகர்

குழந்தைகள் இருவரும், பாரதி மற்றும் கண்ணம்மா இணைய ஆசைப்பட்டு வருவதால், விரைவில் ஒரு திருப்பம், பாரதி கண்ணம்மா தொடரில் நடைபெறும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், 90'ஸ் காலகட்டத்தில் நிறைய சீரியல்கள் நடித்துள்ள நடிகர், புதிதாக இந்த தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளது, சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

யாரு இது மெசேஜ் பண்றது?

பாரதியின் தாய் சவுந்தர்யாவுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து மெசேஜ் வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்றும், டியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியும் மெசேஜ்கள் வருகின்றன. இதனால் எரிச்சல் அடையும் சவுந்தர்யா, கோபத்தில் சில மெசேஜ்களை அனுப்ப, நேரில் சந்திக்கலாமா என்றும் அந்த மர்ம நபர் மெசேஜ் அனுப்புகிறார்.

இதனால், கோபத்தை அடக்க முடியாமல், விரக்தி அடையும் சவுந்தர்யா, நேரில் சந்தித்து தான் யார் என்பதை நிரூபிக்க முடிவு செய்து சம்மதமும் சொல்கிறார். அந்த நபர் குறிப்பிட்ட இடத்திற்கும் சவுந்தர்யா செல்ல, யார் என்பதை தெரிந்து கொண்டதும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

இன்ப அதிர்ச்சியில் சவுந்தர்யா

வேணு மற்றும் சவுந்தர்யா ஆகியோருடன் கல்லூரியில் ஒன்றாக படித்த விக்ரம் தான் அது என்பது தெரிய வருகிறது. இதனால், கோபத்தில் வந்த சவுந்தர்யா, சற்று தணிந்த நிலையில், அடுத்த கொஞ்ச நேரத்தில் மீண்டும் ஒரு ட்விஸ்ட்டும் அவருக்கு காத்திருக்கிறது. கோவிலுக்கு போவதாக, கணவரிடம் சவுந்தர்யா பொய் சொல்லி விட்டு வரவே, வேணுவும் அங்கே வந்து விடுகிறார்.

கல்லூரி நாட்களை போல வேணு மற்றும் விக்ரம் ஆகியோர் இணைந்து மீண்டும் தன்னை 'Prank' செய்வதை நினைவு கூர்கிறார் சவுந்தர்யா. தொடர்ந்து, பழைய நாட்கள் பற்றி மூவரும் பேசிக் கொண்டிருக்கவும் செய்கிறார்கள்.

பிரபல நடிகர் பரத் மோகன்

விக்ரம் கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளது வேறு யாருமில்லை. 90'ஸ் காலகட்டத்தில் பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள பரத் கல்யாண் தான். இதற்கு முன்பு, ஜீ தமிழில் ஒளிபரப்பான 'ராஜா மகள்' என்னும் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் பரத் நடித்திருந்தார். தொடர்ந்து, தற்போது பாரதி கண்ணம்மா போன்ற ஒரு பிரபல தொடரில், பரத் களமிறங்கியுள்ளது ஏன் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்ளைத் தொற்றிக் கொண்டுள்ளது.

கோயிலுக்கு போயிட்டு வந்து படுத்தவரு.. மாரடைப்பால் 'நகைச்சுவை' நடிகர் அதிர்ச்சி மரணம்

தொடர்புடைய இணைப்புகள்

90s popular actor entry in bharathi kannamma serial

People looking for online information on Barathi Kannamma, Barathi Kannamma Serial, Barathi Kannamma Serial Episode, Vijay Television will find this news story useful.