“கனவெல்லாம் நீதானே” இப்படிதான் உருவானதா..?.. 90S புகழ் பாடகர் திலிப் வர்மன் பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல மலேசிய தமிழ் இசைக்கலைஞர் திலிப் வர்மன் பாடலாசிரியராகவும் இசையமைப்பாளராகவும் உலகத் தமிழர்கள் மத்தியில் 90களின் பிற்பகுதியில் அறியப்பட்டவர்.

Advertising
>
Advertising

தமிழ்த்திரைத்துறையின் இசையமப்பாளர்களான இளையராஜாவுக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ரசிகரான, திலிப் வர்மன், பல தனியிசைப் பாடல் தொகுப்புகளால் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸை ரசிகர்களாக பெற்றார். குறிப்பாக திலிப் வர்மன் பாடிய கனவெல்லாம் நீதானே பாடல் மிகப் புகழ் பெற்ற ஒன்றாகும்.

இவை தவிர, நவம்பர் 24, கண்கள், இவன்தான் ஹீரோ ஆகிய மலேசியத் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள திலிப் வர்மன், 2007 ஆம் ஆண்டிற்கான மலேசிய இந்திய இசைத் துறை வழங்கிய சிறந்த பாடகருக்கான ஆண் பிரிவில் விருது பெற்றுள்ளார். “நவீனம்” என்னும் பாடல்தொகுப்பில் பாடியதன் மூலம் பிரபலமான திலிப் வர்மன், “கனவுகள் வரும்”, “உயிரைத் தொட்டேன்” ஆகிய பாடல்கள் மூலம் இன்னும் பல ரசிகர்களிடையே ரீச் ஆனார்.

இந்நிலையில் கனவெல்லாம் நீதானே பாடல் உருவான பின்னணி குறித்து பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் தளத்தில் பிரத்தியேக பேட்டி கொடுத்திருக்கும் பாடகர் திலிப் வர்மன், “பாடல் திறன் போட்டி என்று ஒரு போட்டியில் கலந்து கொண்டேன், அதில் நான் அந்த சீசனில் வெளியேறி விட்டேன். ஆனால் அதில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர், நான் இசைக்கலைஞன் என்பதை தெரிந்து கொண்டு என்னுடன் சேர்ந்து பணிபுரிய தயாராகி வந்தார்.

அந்த நண்பர்தான் எனக்கு முதன்முதலில் முழுமையான அந்த வாய்ப்பை அந்த பாடலுக்காக கொடுத்தார். அந்த பாடல்தான் முதன்முதலில் 100% நானே எழுதி, இசையமைத்து, பின்னணி இசை கோர்ப்புகளை சேர்த்து, பின்னணி இசை வாத்தியங்களை வாசித்து, உருவாக்கிய பாடல். அதற்கான வாய்ப்பை அவர்கள் கொடுத்திருந்தார்கள். இந்த ஆல்பம் தொகுப்பில் ஏழு பாடல்களை நாங்கள் உருவாக்கினோம், அப்படி தொடங்கியதுதான் ‘கனவெல்லாம் நீதானே’ ஆல்பம் தொகுப்பு” என்று குறிப்பிட்டார்.

“கனவெல்லாம் நீதானே” இப்படிதான் உருவானதா..?.. 90S புகழ் பாடகர் திலிப் வர்மன் பேட்டி வீடியோ

90S fame Singer Dhilip Varman Interview திலிப் வர்மன் பேட்டி

People looking for online information on Dhilip Varman Interview, Dhilip Varman Musical Interview will find this news story useful.