90S ‘ஈரமான ரோஜாவே’ பட ஹீரோயினா இவங்க? இப்போ ஆன்மீக போதகரா? எப்படி இருக்காங்க பாருங்க.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் 90களில் முதலே பிரபலமானவர் நடிகை மோகினி. இவர் ஈரமான ரோஜாவே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நாயகியாக அறிமுகமானார்.

90S eeramana rojave actress mohini becomes preacher
Advertising
>
Advertising

1991-ம் ஆண்டு இயக்குநர் கேயார் இயக்கிய 'ஈரமான ரோஜாவே' திரைப்படம் அந்த காலத்தில் 90களில் பிறந்த இளைஞர்களுக்கு புத்துணர்வை கொடுத்த காதல் டிராமா திரைப்படமாக ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலம் அறிமுகமான மோகினி தம்முடைய முதல் படத்திலேயே ஏகோபித்த ரசிகர்களை அள்ளினார்.

90S eeramana rojave actress mohini becomes preacher

இதனைத் தொடர்ந்து நடிகை மோகினி, 'புதிய மன்னர்கள், 'நாடோடி பாட்டுக்காரன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். குறிப்பாக இவருக்கு இருந்த பச்சை நிற கருவிழி இவருடைய ரசிகர்களிடையே இவர் இன்னும் பிரபலமாவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

பின்னர் இவர் திருமணம் ஆகி அமெரிக்கா சென்று வாழத் தொடங்கினார். தற்போது கிறிஸ்தவராக மாறிய இவர் மோகினி கிறிஸ்டினா என்கிற பெயரில் தம்மை மத ஈடுபாட்டுடன் இணைத்துக்கொண்டு ஆன்மீக சொற்பொழிவு, சிந்தனை பகிர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

90S eeramana rojave actress mohini becomes preacher

People looking for online information on Eeramana Rojave, Mohini christina will find this news story useful.