அச்சு அசல் நடிகை சௌந்தர்யா போலவே இருக்கும் பெண்..! ட்ரெண்ட் ஆகும் ரீல்ஸ் & ஃபோட்டோஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகை சௌந்தர்யா போலவே இருக்கும் பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.

Advertising
>
Advertising

                      Images are subject to © copyright to their respective owners.

Also Read | தனது இயக்கத்தில் 19 படங்கள் நடித்த விஜயகாந்த் -ஐ நேரில் சந்தித்த SA சந்திரசேகர்.. என்ன விசேஷம்.?

தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை சௌந்தர்யா. கர்நாடக நடிகையான இவர் கன்னட திரைப்படம் மூலம் 90களில் ஹீரோயினாக அறிமுகமானார். கந்தர்வா என்கிற திரைப்படத்தில் நடிகையாக பிரபலமான சௌந்தர்யா அடுத்தடுத்து கன்னட திரைப்படங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பல ரசிகர்களை சம்பாதித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு பட இயக்குனர்களின் கவனமும் நடிகை சௌந்தர்யா மீது திரும்பியது.

தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பொன்னுமணி என்கிற திரைப்படத்தில் 1993 ஆம் ஆண்டு சௌந்தர்யா நடிக்க அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த் என பல நடிகர்களின் திரைப்படங்களிலும் சௌந்தர்யா நாயகனாக நடித்தார்.

Images are subject to © copyright to their respective owners.

தமிழில் முத்துக்காளை, அருணாச்சலம், படையப்பா, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற சௌந்தர்யா தொடக்கத்தில் மருத்துவராகும் கணவுடன் எம்பிபிஎஸ் படிக்க தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எம்பிபிஎஸ் படிக்க தொடங்கிய இவர் பின்னர் முழுநேர ஹீரோயினாக உருவெடுத்தார். கடந்த 2003ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் பல்வேறு தளங்களிலும் இயங்கி வந்த சௌந்தர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு விமானத்தில் சென்றபோது விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார்.

Image Credit : chitra_jii2

நடிகை சௌந்தர்யாவின் மறைவு பல ரசிகர்களையும் திரையுலகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில்தான் பார்ப்பதற்கு  நடிகை சௌந்தர்யா போலவே இருக்கக்கூடிய பெண் ஒருவரின் புகைப்படங்களும் ரீல்ஸ் வீடியோக்களும் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.

அவரை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் சௌந்தர்யாவின் முக ஜாடையை ஒத்து இருக்கிறீர்கள், அட சௌந்தர்யாவின் மறுபிறவியா? என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

Image Credit : chitra_jii2

குறிப்பிட்ட அந்த பெண்ணும் இதை உணர்ந்தே பல ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

Also Read | “நிஜ வாழ்க்கையில் கெட்டவனே ஜெயிக்கிறான்.. இந்த படத்துல என்ன பார்த்தே பயந்தேன்” - சரவணன் Exclusive

90S Actress Soundarya lookalike trending viral pics reels

People looking for online information on Actress soundarya, Lookalike, Soundarya Look alike will find this news story useful.