உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி நாடு மக்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார். நமது ஒற்றுமையை காட்டும் வகையில் 9 ஆம் தேதி, வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து, விளக்குகள் அல்லது தீபங்களை ஏற்றி 9 நிமிடங்களுக்கு ஒளிர செய்யும் படி கூறினார். இதனையடுத்து பொதுமக்களும், பிரபலங்களும் விளக்குகளுடன் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா நேற்று 9 மணிக்கு ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் இருட்டில் சிகரெட்டை பற்ற வைக்கிறார். இந்த வீடியோ தற்போது சர்ச்சைகுள்ளாகியுள்ளது.
இதற்கு முன்னே தனக்கு கொரோனா நோய் இருப்பதாக கூறி பின்பு, ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் அன்று அனைவரையும் ஏமாற்ற தான் அப்படி கூறினேன் என்றும் சொல்லியிருந்தார். இந்நிலையில் மீண்டும் இந்த வீடியோவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.