8 YEARS OF ARRAMBAM: தல அஜித் நடித்த ஆரம்பம்! தமிழ் சினிமா ஒளிப்பதிவில் மிக முக்கிய படம்! ஏன் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் நடிப்பில், இயக்குனர் விஷ்னுவர்தன் இயக்கத்தில், ஒம் பிரகாஷ் ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீசான திரைப்படம் 'ஆரம்பம்".

Advertising
>
Advertising

தல அஜித் - விஷ்னுவர்தன்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம்.  இதற்கு முன் 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படத்தின் இந்த கூட்டணி முதல் முறையாக இணைந்தது.  2013 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான ஆரம்பம் திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. தமிழகத்தில் மட்டும் சுமார் 65 கோடி ரூபாய் வசூல் செய்தது. 

ஆரம்பம் படம் வெளியாகி இன்றுடன் 8 வருடங்கள் ஆகிறது. இதில் சுவாரஸ்யமான ஒரு தகவலும் உண்டு, முதலில் ஆரம்பம் பட துவக்கத்தின் பொழுது ஒளிப்பதிவாளராக நிரவ்ஷா ISC பெயர் முன்மொழியப்பட்டது. அவர் தளபதி விஜய் நடித்த தலைவா படத்தில் பிஸியாக இருந்ததால் ஆரம்பம் படத்தில் பணியாற்ற முடியவில்லை. பிறகு பிஎஸ் வினோத் ISC ஒளிப்பதிவாளராக பேசப்பட்டது. பிறகு இருவருக்கும் பதிலாக வாகை சூட வா ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார்.

ஏற்கனவே அஜீத் விஷ்ணுவர்தன் நிரவ்ஷா கூட்டணியில் வெளியான பில்லா படத்தில் கருப்பு வெள்ளை நிறங்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டு ஒளிப்பதிவு உலகத்தரத்தில் இருக்கும். நிரவ்ஷா இல்லாத குறை ரசிகர்களுக்கு ஏற்படாத "வண்ணம்" தனது ஒளிப்பதிவின் மூலம் படத்தை அதி ஸ்டைலிசாக கொடுத்திருந்தார் ஓம்பிரகாஷ். குறிப்பாக இடைவேளை சண்டைக்காட்சியில் 360 டிகிரியில் உருளும் காருக்குள் கேமரா வைத்து 5 வினாடிக்கும் குறைவான ஷாட்டாக இருந்தாலும் அதை படம் பிடித்ததாகட்டும், துபாயில் நீருக்கு மேலே படகு சண்டைக்காட்சியாகட்டும், ஹோலி திருவிழா பாடல் காட்சியில் பயன்படுத்திய வண்ணங்களாகட்டும் ஆரம்பம்  படத்தின் ஒளிப்பதிவு அபாரமானது.

இந்த படத்தின் ஒளிப்பதிவில் அதிலும் இந்த படத்தில் பயன்படுத்திய வண்ணங்கள் (Colour Palates) உலகத்தர நிலையில் Colour Psychology அடிப்படையில் உள்ளவை. ஆரம்பம் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் அதற்கேற்ற தேர்ந்தெடுத்த வண்ணக்கலவைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கும். படத்தில் தல அஜித்தின் கதாபாத்திரம் அசோக் குமார் சந்திக்கும் போராட்டங்களை, படம் பார்க்கும் ரசிகர்கள் அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள் இயக்குனர் விஷ்ணுவர்தன் கடத்த விரும்பிய உணர்வை கடத்த வைப்பதற்காக, இந்த கலர் சைக்காலஜி அடிப்படையில்  பச்சை வண்ணத்தை படம் முழுவதும் வெவ்வேறு வண்ணக்கூறுகளில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பயன்படுத்தியிருப்பார். கீழே கொடுக்கப்பட்டுள்ள காட்சிகள் அதற்கு சில உதாரணங்கள்.

ஆரம்பம் படத்தின் ப்ளாஸ்பேக் காட்சிகளில் நீல நிறமும், சிவப்பு நிறமும் பச்சையுடன் ஓரு சேர பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த படத்தில் இயக்குனர் - ஒளிப்பதிவாளர் விரும்பும் நிறங்களை திரையில் கொண்டுவர உடை வடிவமைப்பாளர் அணுவர்தன் மற்றும் கலை இயக்குனர் லால்குடி இளையராஜவின் பங்கும் அளப்பறியது.  

 

 

தொடர்புடைய இணைப்புகள்

8 Years Of ARRAMBAM Movie Colour Palates Cinematography

People looking for online information on Ajith Kumar, Anu Vardhan, Arrambam, Om Prakash, Vishnuvardhan, Yuvan Shankar Raja will find this news story useful.