மலையாள பட போஸ்டரில் ப்ரியதர்ஷன் செய்த விஷயம்..! நெகிழ்ந்த “8 தோட்டக்கள்” இயக்குநர்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றி நடிப்பில் 8 தோட்டாக்கள், அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஸ்ரீ கணேஷ்.

Advertising
>
Advertising

Also Read | "பணம் கையில் வந்தால்தான் நிஜம்".. இயக்குநர் செல்வராகவனின் வைரல் போஸ்ட்..!

கடந்த 2017ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த  ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தை இயக்கினார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இதனை தொடர்ந்து மதுரையை மையமாக வைத்து நடிகர் அதர்வா - நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கினார் ஸ்ரீ கணேஷ். இந்நிலையில் இயக்குனர் ஶ்ரீ கணேஷ், பிரபல நடிகை சுஹாசினி சஞ்சீவை கடந்த செப்டம்பர் 2022-ல் திருமணம் செய்துள்ளார். சுஹாசினி சஞ்சீவ், தமிழ் சினிமாவில் நெஞ்சுக்கு நீதி, வனம், சர்பத், சீதக்காதி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே ஸ்ரீ கணேஷ் தமிழில் இயக்கிய 8 தோட்டக்கள் திரைப்படம் மலையாளத்தில் ரீமேக் ஆகியுள்ளது. இந்நிலையில் 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தம்முடைய சமூகவலைத்தள பக்கத்தில் கொரோனா பேப்பர்ஸ் திரைப்படத்தின் முதல் பார்வையை பகிர்ந்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஷேன் நிகம், ஷைனி தாம் சாக்கோ, காயத்ரி சங்கர் ,சித்திக், சந்தியா ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே.பி.இசையமைத்திருக்கிறார். ஃபோர் ஃப்ரேம்ஸ் சவுண்ட் கம்பெனி இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள இயக்குநர் ஸ்ரீ கணேஷ், “வழக்கமாக இது போன்று ரீமேக் செய்யப்படும் திரைப்படங்களில் ரீமேக் செய்யப்பட்ட பிறகு அந்த படத்தின் இயக்குனர் பெயரை மட்டுமே போடுவார்கள். படத்தின் ஸ்டோரி ரைட்டர் பெயர் போடமாட்டார்கள். ஆனால் இந்த திரைப்படத்தில் ஸ்டோரி பெயர் போஸ்டரிலேயே இடம் பெற்றுள்ளது. ஆம், ஒரிஜினல் கதை ஆசிரியரான என்னுடைய பெயரை குறிப்பிட்டு இருக்கிறார்கள். எனது பெயர் போஸ்டரில் இருக்க வேண்டும் என்பதில் இயக்குனர் ப்ரியதர்ஷன் உறுதியாக இருந்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

மலையாள திரை உலகில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். இது தமிழ் திரையுலகிலும் இதுபோன்று எழுத்தாளர்களுக்கான உரிய அங்கீகாரமும் கௌரவமும் வழங்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | RRR : இந்த பாட்டுல இதே கெட்டப்ல ராஜமௌலி ஆடிருக்காரா?.. நடன இயக்குநர் பகிர்ந்த செம BTS

8 Thottakkal Sri Ganesh Praises Priyadarshan for name credit

People looking for online information on 8 Thottakkal, Sri Ganesh will find this news story useful.