ஏ.சி.மெக்கானிக் TO ஆஸ்கர் பட நடிகர்... இர்பான் கான் பற்றி யாருக்கும் தெரியாத 8 ரகசியங்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவையே உலுக்கி இருக்கும் மரணம் நடிகர் இர்பான் கான்னுடையது. யார் இவர்? ஏன் இத்தனை பேர் அழுகிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். இர்பான் கான் பற்றி பலருக்கும் தெரியாத 8 ரகசியங்களை இப்போது பட்டியலிடுகிறோம். பின்பு நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

1967 ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில்  பிறந்த இவர் ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை அந்த காலத்திலேயே டயர் பிசினஸ் செய்து வந்துள்ளார்.

இர்பான் கானுக்கு ஆரம்பித்தில் கிரிக்கெட் வீரராக  வேண்டும் என்று ஆசை இருந்ததாம். ஆனால் எதிர்பாராத விதமாக நடிப்பு பயிற்சி ஸ்காலர்ஷிப் கிடைக்க அதன் மூலமாகவே நடிப்பு துறையில் கால் வைத்தார்.

மும்பைக்கு வந்த அவர் ஆரம்பத்தில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றியுள்ளார். அப்படி பணியாற்றும்போது முதன் முதலில் அவர் ஹிந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் ராஜேஷ் கண்ணா வீட்டில் தான் வேலை செய்தாராம்.

இர்பான் கானின் முதல் படம் 1988 ஆம் ஆண்டு வந்த 'சலாம் பாம்பே'. இந்த படத்தில் அவரது அதிக உயரம் அவருக்கு மிகுந்த இடையூறாக இருந்ததால் அவரது காட்சிகள் படத்தில் குறைக்கப்பட்டதாம். இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இர்பான் கான் தன்னுடன் பயின்ற கல்லூரி தோழியை திருமணம் செய்து கொண்டார். அவர் ஒரு எழுத்தாளர். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த தோல்விகளால் மிகவும் சோர்ந்து போன அவர், நடிப்பு தொழிலை விட்டு விடலாம் என்று முடிவு செய்துள்ளார். அந்த நிலையில்தான் அவரது Warrior படம் வெளியாகி சக்கை போடு போட  மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.

இவருக்கு ஒரு வினோத ஆசை இருந்ததாம் சினிமாப் படங்களில் வருவது போல, ஒரு பெட்டி நிறைய பணம் வைத்து அவரது தாய்க்கு பரிசளிக்க வேண்டும் என்று நினைத்தாராம். கடைசியில் அந்த ஆசை நிறைவேறாத ஆசையாக மாறி உள்ளது.

பலரும் அறியாத ஒரு விஷயம். இவரை உலகின் புகழ்பெற்ற இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் 2014 ஆம் ஆண்டு நடிக்க அழைத்தும், அந்த அழைப்பை அவர் மறுத்து உள்ளார். நோலன் இயக்கிய Interstellar படத்தில் நடிக்க அழைத்தபோது அவர் லஞ்ச் பாக்ஸ் படத்தில் பிஸியாக இருந்ததால், அந்த வாய்ப்பை நழுவ விட்டுள்ளார்.

இந்தியாவிலேயே ஆஸ்கர் விருது வென்ற இரண்டு படங்களில் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி சொல்லிக்கொண்டே போக பல ஆயிரம் சாதனைகளை படைத்த ஒரு மனிதன் தற்போது இயற்கை எய்தியுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் இர்பான் கான் பற்றி யாருக்கும் தெரியாத 8 ரகசியங்கள்Popular 8 secrets about Irrfan khan

People looking for online information on Actor, Death, Irrfan Khan, Secrets will find this news story useful.