2019 ஆம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டில்லியில் இன்று (25.10.2021) நடைபெற்றது.
துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு விழாவுக்கு தலைமை தாங்கி திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கினார். மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். இதில் தமிழகத்தை சார்ந்த பல சினிமா கலைஞர்கள் விருது பெற்றனர். அவர்களை வாழ்த்தி நடிகர் நாசர் பாராட்டியுள்ளார். அதில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
வணக்கம்!
அபூர்வ ராகங்கள் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி, 46 வருட திரைப்பயணத்தில், எண்ணற்ற பல சாதனைகள் படைத்து, உலகம் முழுக்க ரசிகர்களால் கொண்டாட படுபவர் சூப்பர்ஸ்டார் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள். அவர் ஆற்றிய கலைப்பணிகளுக்கு, இந்திய அரசின் உயரிய கலைத்துறை விருதான, தாதா சாகேப் பால்கே விருதினை அவர் பெறுவது, இந்திய மற்றும் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம். அவரது கலைப்பயணம் மேலும் தொடர
அனைத்து நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மற்றும் இன்று தேசிய விருது பெற்ற கலைஞர்களான
சிறந்த நடிகர் தனுஷ் ( அசுரன் ), சிறந்த துணை நடிகர் விஜய்சேதுபதி ( சூப்பர் டீலக்ஸ் ), ஜூரி விருது பார்த்திபன் ( ஒத்த செருப்பு ), சிறந்த தமிழ் படம் விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறன் ( அசுரன் ), சிறந்த இசையமைப்பாளர் டி.இமான் ( விஸ்வாசம்-கண்ணான கண்ணே.. ), சிறந்த ஒலிக்கலவை ரசூல் பூக்குட்டி ( ஒத்த செருப்பு ), சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால் ( கே.டி (எ) கருப்புதுரை ) ஆகியோருக்கு அனைத்து நடிகர் நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். நன்றி! அன்புடன், நாசர், நடிகர், அனைத்து நடிகர் நடிகைகள் சமூகம் சார்பில்.என குறிப்பிட்டுள்ளார்.