66வது தேசிய விருதுகள் அறிவிப்பு - வெற்றியாளர்கள் விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைத்துறையில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்கள் மற்றும் சிறந்த படைப்புகளை கவுரவித்து வழங்கப்படும் தேசிய விருதுகள் இன்று ஆக.9ம் தேதி அறிவிக்கப்பட்டது.

மக்களவை தேர்தல் காரணமாக தாமதமாக அறிவிக்கப்பட்ட 66வது தேசிய விருதுகள் பட்டியலின் முழு விவரம் இதோ:

இந்த ஆண்டு முதன்முறையாக, படப்பிடிப்பிற்கு ஏற்ற மாநிலம் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விருதுக்கு உத்தர்காண்ட் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த படம்: ஹேலாரா(குஜராத்)

சிறந்த தமிழ் படம்: பாரம் (பிரியா கிருஷ்ணசாமி இயக்கியுள்ள இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை)

சிறந்த நடிகர்கள்: ஆயுஸ்மான் குரானா(அந்தாதூன்), விக்கி கவுசல்(உரி)

சிறந்த நடிகை: கீர்த்தி சுரேஷ் (மகாநடி, தெலுங்கு)

சிறந்த இயக்குநர்: ஆதித்யா தார் (படம்: உரி)

சிறந்த அறிமுக இயக்குநர்: சுதாகர் ரெட்டி

சிறந்த துணை நடிகர்: சாவந்த் கிர்கிரி (படம்: சம்பக் - மராத்தி)

சிறந்த துணை நடிகை: சுரேகா சிக்ரி (படம்: பதாய் ஹோ - ஹிந்தி)

சிறந்த இசையமைப்பாளர்: சஞ்சய் லீலா பன்சாலி(பத்மாவத்)

சிறந்த பின்னணி பாடகர்: அர்ஜித் சிங்(பத்மாவத்)

சிறந்த பின்னணி பாடகி: பிந்து மாலினி (நதிசராமி - கன்னடம்)

சிறந்த பின்னணி இசை: சாஸ்வத் சஜ்தேவ்(உரி)

சிறந்த பொழுதுப்போக்கு படம்: பதாய் ஹோ

சிறந்த குழந்தை நட்சத்திரம்: பிவி ரோகித்(கன்னடம்), சமீப் சிங்(பஞ்சாபி), தல்ஹா அர்ஷத் ரெஷி(உருது), ஸ்ரீனிவாஸ் போகலே(மராத்தி)

சிறந்த படத்தொகுப்பு: நாகேந்திர கே.உஜ்ஜைனி (நதிசராமி - கன்னடம்)

சிறந்த ஆடை அலங்காரம்: இந்திராக்ஷி, கவுரங் ஷா மற்றும் அர்ச்சனா ராவ் (மகாநடி - தெலுங்கு)

சிறந்த மேக்கப்: ரஞ்சித் (அவே - தெலுங்கு)

சிறந்த பாடலாசிரியர்: மஞ்சுநாதா (பாடல்: மாயாவி மனாவே... - படம் நதிசராமி - கன்னடம்)

சிறந்த திரைக்கதை: ராகுல் ரவிந்திரன் (தெலுங்கு)

சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : அவே(தெலுங்கு) - கேஜிஎப்(கன்னடம்)

சிறந்த ஒளிப்பதிவு: எம்ஜே.ராதா கிருஷ்ணன் (ஒலு - மலையாளம்)

சிறந்த சமூக கருத்து கொண்ட படம் : பேட்மேன்

சிறந்த ஆக்ஷன் படம் : கேஜிஎப் சாப்டர் 1

66th National Film Awards announced winners list

People looking for online information on 66th National Awards, National awards, Winners list will find this news story useful.