விக்ரம் - துருவ் நடிக்கும் கார்த்திக் சுப்புராஜின் சீயான் 60.! - இப்போது இவரும் இருக்காராம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம், த்ருவ் நடிக்கும் சியான் 60 படம் குறித்து முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷை வைத்து ஜகமே தந்திரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து இவர் விக்ரம் மற்றும் த்ருவ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கு தற்போது சீயான் 60 என பெயரிடப்பட்டுள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இந்நிலையில் சீயான் 60 படம் குறித்து முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஜில் ஜங் ஜக், அவள், ராக்கி உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் படத்திற்கும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கார்த்திக் சுப்புராஜ் விக்ரமின் சீயான் 60 - இப்போ இவர் என்ட்ரி | cinematographer for karthik subbaraj, vikram, dhruv's chiyan 60 locked

People looking for online information on Chiyaan 60, Dhruv, Jagame Thanthiram, Karthik Subbaraj, Vikram will find this news story useful.