ஆறு வருசம் ஆன மாதிரியே தெரியல! நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன்! வைரலாகும் BTS புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நானும் ரவுடி தான்' திரைப்படம்.

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக  நடித்திருந்தார். நயன்தாரா காது கேட்காத பெண்ணாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக  நடித்திருந்தார். பார்த்திபன் வில்லனாகவும், ஆர் ஜே பாலாஜி காமெடி ரோலிலும் நடித்தனர். அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6  வருடங்கள் ஆகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போது தான் இயக்குனர் விக்னேஷ் சிவன்- நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில் ஆறு வருடங்கள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை எனக் குறிபபிட்டு நயன்தாரா உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு BTS புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தின் வெளியீட்டுக்கு காத்திருக்கிறார்.

 

இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்

தொடர்புடைய இணைப்புகள்

6 years of nanum rowdy thaan vignesh shivan nayanthara

People looking for online information on Dhanush, Nayanthara, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.