மனுசன் என்னமா ஆடுறாரு!! எண்ட்ரிலயே தெறிக்கவிட்ட BIGGBOSSTAMIL5 புது போட்டியாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் இணைந்துள்ள போட்டியாளர்கள் 50 நாட்களை கடந்து ஒரே வீட்டில் ஹவுஸ் மேட்ஸாக வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே பிக்பாஸ் வீட்டில் முதல் நாள் இணைந்த 18 போட்டியாளர்களுள் பலரும் வெளியேறிவிட்டனர்.

Advertising
>
Advertising

முதலாவதாக தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா மாரிமுத்து வெளியேறிவிட்டார். அவரை தொடர்ந்து அதிகாரப்பூர்வ வெளியேற்றமாக நாடியாவின் எலிமினேஷன் நடந்தது. அவரைத் தொடர்ந்து அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி உள்ளிட்டோர் அடுத்தடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகினர். பின்னர் அபிஷேக் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, சர்ப்ரைசாக தற்போது புதிய நபர் ஒருவர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஆம், பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் பல்வேறு விதமான பாடல்களுக்கு ஜோடி ஜோடியாக நடனம் ஆடினர்.

அப்படி அக்‌ஷரா மற்றும் வருண் இணைந்து நடனம் ஆடினர். இவர்களை தொடர்ந்து சிபி மற்றும் தாமரை இணைந்து நடனமாடினர். இப்படி நடனமாடிக் கொண்டிருக்கும் போது ஒருவர் அசத்தலாக நடனமாடிக் கொண்டே பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார்.

அவர் ஆடிய ஆட்டம் மிரட்டி விட்டது. ஆனால் முகத்தில் மாஸ்க் போட்டு இருந்த அவர் யார் என்று பலராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கைந்து ஆட்ட நகர்வுகளை கவனித்து பின்னர் பிரியங்கா மட்டும், “இது அமீர் தானே?” என்று உரக்கக் கத்தினார். பின்னர் போட்டியாளர்களுடன் இணைந்து நடனமாடிய அந்த நபர் மாஸ்க்கை கழட்டினார்.

அதன் பிறகுதான் அவர் அமீர் என்பது தெரிய வந்தது. அவரை பிக்பாஸ் வரவேற்றார். அமீர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கோரியோகிராஃபி செய்த டான்ஸ் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் பள்ளிக்காலங்களை நினைவுபடுத்தும் கனா காணும் காலங்கள் டாஸ்கில் மாஸ்டர் அமீர், இசை மற்றும் நடன வகுப்பு ஆசிரியராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

52th episode dance master wild card mass entry biggbosstamil5

People looking for online information on 52th episode, BiggBossTamil5, Dance Master, Mass entry, Wild card will find this news story useful.