RRR, வலிமை படங்களுக்கு சிக்கல் .. தியேட்டர்ல 50% மட்டுமே அனுமதி..மறுபடியும் முதல்ல இருந்தா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Chennai: கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதியில் இருந்து 50% பார்வையாளர்களாக குறைக்கப்பட்டுள்ளது

50% Theatre occupancy for RRR & Valimai in Tamil Nadu
Advertising
>
Advertising

தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு 2020 மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன. 250 நாட்களுக்கு பிறகு கடந்த 2021 ஆண்டு நவம்பர் மாதத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவீதப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மீண்டும் கொரோனா 2-ம் அலைப் பரவலால் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டன.

50% Theatre occupancy for RRR & Valimai in Tamil Nadu

கொரோனா பெருந்தொற்று காரணமாக திரையரங்குகள் திறக்கமால் இருந்தது. பின்னர் தமிழக அரசு 2021 ஆகஸ்ட் முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்தது. பின்னர் இது 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜனவரி மாதம் 1 முதல் ஜனவரி 10 வரை தமிழக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு (பார்வையாளர்கள்) மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி மாதம் 7 அன்று வெளியாகும் RRR படத்திற்கும் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் வலிமை படத்திற்கும் சிக்கல் எழும். இன்று தான் வலிமை படம் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெறப்பட்டது.

 

தொடர்புடைய இணைப்புகள்

50% Theatre occupancy for RRR & Valimai in Tamil Nadu

People looking for online information on 50, வலிமை, Corona, Corona Lock Down, Lock Down, RRR, RRR Movie, Theatre, TN Govt, Valimai will find this news story useful.