கொரோனா வைரஸ் மனிதர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளது. பலரும் அவர்களது அன்றாட வாழ்க்கையை மறந்து வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அலெக்ஸ்பாண்டியன் பையா போன்ற படங்களில் நடித்தவர் வில்லன் நடிகர் மிலிந்த் சோமன். இவர் ஹிந்தியில் புகழ்பெற்ற நடிகர் ஆவார். மேலும் உடற்பயிற்சியி மாரத்தான், ஓட்டத்தில் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் நடிகர் மிலிந்த் சோமன் மற்றும் அவரது மனைவி 75 நாட்களுக்கு பிறகு முதல்முறையாக ஐந்து கிலோமீட்டர் நடை பயிற்சி செய்துள்ளனர். இந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டார்.
அவர் கூறும்போது "ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்பு இது முதல் ஓட்டம். 75 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக ஓடுவதால் இந்த முறை நடந்து தான் சென்றோம். ஏனென்றால் மனித உடலால் இவ்வளவு பெரிய மாற்றத்தை சந்திக்க முடியாது. அருமையான சுற்றுச்சூழல் ரசித்துகொண்டு ஐந்து கிலோமீட்டர் நானும் எனது மனைவியும் நடைபயணம் மேற்கொண்டோம். இப்போது நலமாக இருக்கிறோம். உண்மைதான் நாங்கள் ஓடும் பொழுது எங்களது மாஸ்க்கை கழட்டி விட்டோம். ஏனென்றால் சுற்றி யாரும் இல்லை" என்று கூறியுள்ளார்.